உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

இன்னும் 4 நாட்களில் கால்பந்து உலகக் கோப்பை துவங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு போட்டியான இந்த கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கேள்வி தான் அனைவர் மத்தியிலும். 2008 மற்றும் 2012ம் ஆண்டின் யூரோ சாம்பியன், 2010 உலகக் கோப்பை சாம்பியன் என 5 வருடங்களுக்கு கால்பந்தை ஆட்டிப்படைத்த ஸ்பெயின் அணி இந்த முறை கோப்பையை வெல்லுமா?
 | 

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

இன்னும் 4 நாட்களில் கால்பந்து உலகக் கோப்பை துவங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு போட்டியான இந்த கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கேள்வி தான் அனைவர் மத்தியிலும். 2008 மற்றும் 2012ம் ஆண்டின் யூரோ சாம்பியன், 2010 உலகக் கோப்பை சாம்பியன் என 5 வருடங்களுக்கு கால்பந்தை ஆட்டிப்படைத்த ஸ்பெயின் அணி இந்த முறை கோப்பையை வெல்லுமா? 

ஸ்பெயினின் பலங்கள் பலவீனங்களை பார்க்கலாம்.

குறைந்த காலத்திலேயே, கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட ஸ்பெயினுக்கு அதற்கு பின் வந்ததென்னவோ மோசமான காலம் தான். 2013ல் நடந்த கான்பெடெரேஷன் கோப்பையில், பிரேசிலிடம் வீழ்ந்தது ஸ்பெயின். எப்போதுமே டிக்கி டாக்கா எனப்படும் குட்டி குட்டி பாஸ், பந்தை வைத்திருக்கும் எதிரணி வீரர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி  கொடுக்கும் ப்ரெஸ்ஸிங், மைதானம் முழுவதையும் உபயோகப்படுத்தி கேப்களை பயன்படுத்தி அதிரடியாக நகரும் திறமை, என எதிரணிகளை ஸ்பெயின் திணற விட்டு வந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் இது அனைத்துமே தலை கீழாக மாறிவிட்டது. 

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் கான்பெடெரேஷன் கோப்பையை தவற விட்டது ஸ்பெயின். அது மட்டுமல்லாமல், 2014 உலகக் கோப்பையில் குரூப் போட்டிகளில் நெதர்லாந்து நாட்டிடம் மோசமான தோல்வியை தழுவியது. ஸ்பெயினின் மேஜிக் இனியும் ஒர்க் அவுட் ஆகவில்லை. நெதர்லாந்து வீரர்கள் 5-1 என பிரித்து மேய்ந்தார்கள். தென் அமெரிக்க நாடான சிலி 2-0 என வீழ்த்த, கோப்பையில் இருந்து வெளியேறியது. 

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

அதன்பின் ஸ்பெயின் பயிற்சியாளர் வின்சென்ட் டெல் பாஸ்க் அணியை விட்டு விலகினார். குட்டி குட்டி பாஸ்களில் இருந்து நேராக அட்டாக் செய்யும் யுக்தியை கொண்டு வந்தார் அணியின் புதிய பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்கி. அவரின் கீழ் மீண்டும் பலமான அணியாக உருவெடுத்த ஸ்பெயின், 2018 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில், 10 போட்டிகளில் 9 வெற்றி ஒரு டிரா என தோற்காமல் தகுதி பெற்றது. 

இந்த உலகக் கோப்பையில், உலகின் மிகசிறந்த கோல் கீப்பராக கருதப்படும் டேவிட் டி கியாவின் காவலில் ஸ்பெயினின் கோல் போஸ்ட் இருக்கும். யூரோ, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற ராமோஸ் - பிக்கே ஜோடி டிபன்ஸை தூணாக நின்று கவனித்துக் கொள்வார்கள்.

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

ஸ்பெயினின் மிகப்பெரிய பலமே அதன் மிட்பீல்டு தான். இனியெஸ்டா, இஸ்கோ, கொகே, டேவிட் சில்வா, அசென்சியோ, தியாகோ, புஸ்கெட்ஸ் என நட்சத்திர பட்டாளம் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு போட்டியிலும் பந்தை எதிராணியிடம் கொடுக்காமல் ஸ்பெயின் முழு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிராக நடைபெற்ற நட்பு போட்டியில், 6-1 என அந்த அணியை பஞ்சராக்கினார்கள் ஸ்பெயின் வீரர்கள். இதனால், உலகக் கோப்பையில் மீண்டும் தனது கால் தடத்தை பதிக்கும் முனைப்புடன் வருகிறது ஸ்பெயின். 

அணியன் அட்டாக் வீரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. அசத்தல் பார்மில் இருக்கும் இயாகோ ஆஸ்பாஸ், ரொட்ரிகோ, டியேகோ கோஸ்டா ஆகியோர் பட்டாக்கத்தி போல நிற்கிறார்கள். 

உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லுமா? - ஒரு பார்வை

இவ்வளவு பலமான அணியை கொண்டுள்ள ஸ்பெயின், இந்த முறை நிச்சயம் உலகக் கோப்பை வெல்லும் அணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அணியின் பலவீனம் நிச்சயம் டிபென்ஸ் தான். மோசமான நிலையில் உள்ள இத்தாலியை தவிர முக்கியமான போட்டிகளில் வேறு எந்த அணியுடனும் மோதாததால், பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் அட்டாக்கை தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

மிட்பீல்டில் உள்ள வீரர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதை அட்டாக் வீரர்கள் சொதப்புவதும் ஸ்பெயின் அணிக்கு ஒரு பலவீனம் தான். மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார், லேவன்டோஸ்கி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாதது ஒரு குறையே. உலகக் கோப்பை போன்ற பெரிய அரங்கில் அதிக அனுபவம் இல்லாத கோஸ்டா, ஆஸ்பாஸ் போன்றோரை நம்பி செல்வது ஸ்பெயினுக்கு பாதகமாக வாய்ப்புள்ளது.

எது எப்படியோ, அனைத்து வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினால், ஸ்பெயினை மீறி செல்வது மிக மிக கடினம். குரூப் போட்டிகளில் போர்ச்சுகல், ஈரான், மொரோக்கோ ஆகிய நாடுகளுடன் மோதுவதால், அடுத்த சுற்றுக்கு எளிதாக முதல் அணியாக முன்னேற ஸ்பெயினுக்கு வாய்ப்புள்ளது. 

 

நாளை இதேபோல, பிரேசில் அணியின் பலங்கள் பலவீனங்களை பார்க்கலாம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP