உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

இந்த கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக அனைத்து நிபுணர்களாலும் கணிக்கப்படுவது பிரேசில் அணி தான். கடந்த 2007ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற பின், பிரேசில் அணிக்கு சர்வதேச அளவில் பெரிய வெற்றி இல்லை. 2014 உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்பெடெரேஷன் கோப்பையை வென்றாலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பையில் ஜெர்மனி கையில் பிரேசில் வாங்கிய மரண அடி, சரித்திர நிகழ்வானது.
 | 

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

இந்த கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளதாக அனைத்து நிபுணர்களாலும் கணிக்கப்படுவது பிரேசில் அணி தான். கடந்த 2007ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற பின், பிரேசில் அணிக்கு சர்வதேச அளவில் பெரிய வெற்றி இல்லை. 2014 உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்பெடெரேஷன் கோப்பையை வென்றாலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உலகக் கோப்பையில் ஜெர்மனி கையில் பிரேசில் வாங்கிய மரண அடி, சரித்திர நிகழ்வானது. 

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

அந்த துயரத்தில் இருந்து பீனிக்ஸ் பறவை போல பிரேசில் எழுந்து வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 2002ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த ஸ்கோலாரியின் கீழ் 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் சந்தித்தது. தங்கள் நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை என்பதால், லட்சக்கணக்கான பிரேசிலியர்களின் ஆதரவுக்கு இடையே கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்டது. குரூப் போட்டிகளில் 2 வெற்றி ஒரு டிரா என்று பலமாக முன்னேறியது. அதன்பின் நாக் அவுட் சுற்றுகளில், சிலியுடன் பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில் கொலம்பியாவை 2-1 என பிரேசில் வீழ்த்தியது வரை அனைத்தும் அவர்களுக்கு சாதமாக சென்றது. ஆனால், போட்டி முடியும் நேரத்தில், கொலம்பிய வீரர் ஸுனிகா, நெய்மாரை பின்னால் இருந்து இடித்ததில், அவர் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அதுவரை 4 கோல்கள் அடித்திருந்த நட்சத்திர வீரர் நெய்மாரின் உலகக் கோப்பை காலிறுதியோடு முடிந்தது. ரசிகர்களுக்கு இந்த சம்பவம் பெரிய ஏமாற்றத்தை தந்தாலும், அடுத்த வரவிருக்கும் அதிர்ச்சியை ஒப்பிடும் போது, இது ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டும். நெய்மாரின்  காயத்தோடு தங்களின் உலகக் கோப்பை கனவு தகர்ந்து விடும் என யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். மிகவும் திறமை படைத்த சூப்பர்ஸ்டார்களை கொண்ட பிரேசில் அரையிறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 7-1 என வீழ்ந்தது. 

நெய்மாரை இழந்த சோகத்தில் விளையாடினார்களோ என்னவோ, 11, 23, 24, 26, 29வது நிமிடம் என முதல் அரைமணி நேரத்தில் 5 கோல்களை ஜெர்மனி அடிக்க, திக்குமுக்காடினர் பிரேசில் வீரர்கள். ரசிகர்களுக்கு ஜெர்மனியின் ஒவ்வொரு கோலும் இடியாக விழுந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் முகத்திலும் கண்ணீர். 

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

அந்த போட்டியின் விளைவாக, பயிற்சியாளர் ஸ்கோலாரி பேக்அப் செய்தார். அவருக்கு பதில் வந்த புதிய பயிற்சியாளர் டுங்காவின் கீழ் பிரேசில் 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்காவில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் வந்தவர் டீட்டே. 

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

இவரின் கீழ் பிரேசில் புதிய உத்வேகத்துடன் ஆடி வருகிறது. 21 போட்டிகளில் 17 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என சூப்பர் பார்மை பிரேசில் வெளிப்படுத்தி வருகிறது. அதுவும், அர்ஜென்டினா, கொலம்பியா, சிலி, உருகுவே, ஜெர்மனி என பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க நாடுகளில் இருந்து முதல் நாடாக உலகக் கோப்பைக்கு பிரேசில் தகுதி பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் விளையாடவிருக்கும் பிரேசில் வீரர்கள் பட்டியல்:

கோல்கீப்பர்: ஆலிசன், எடர்சன், காசியோ

டிபன்ஸ்: மிராண்டா, மார்க்கீனோஸ், தியாகோ சில்வா, டேனிலோ, பிலிப்பே லூயிஸ், ஜெரோமெல், மார்செலோ, ஃபாக்னர் 

மிட்பீல்டு: கேசிமிரோ, பெர்னாண்டினோ, பாலினோ, குட்டினோ, வில்லியன், ப்ரெட், ரெனாட்டோ அகுஸ்டோ 

அட்டாக்: நெய்மார், ஜீசஸ், டக்ளஸ் கோஸ்டா, பிர்மினோ, டைசன்.

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

டிபென்ஸ், மிட்பீல்டு, அட்டாக் என அனைத்து தரப்பிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஜொலிக்கின்றனர். ஐரோப்பிய க்ளப்களில் எதிரணிகளை பிரித்தெடுக்கும், நெய்மார், வில்லியன், குட்டினோ, ஜீசஸ், பிர்மினோ ஆகியோரை ஒரே நேரத்தில் பார்த்தால் எந்த டிபென்ஸுக்கும் மூச்சு முட்டிவிடும். 25-30 அடி வெளியே இருந்து கூட எந்த நேரமும் கோல் அடிக்கும் திறமை கொண்டவர்கள் இவர்கள். நெய்மாரை கட்டுப்படுத்த முயன்றால், மறுமுனையில், வில்லியன் அல்லது கோஸ்டா திணறடிப்பார்கள். எனவே, பிரேசிலின் மிகப்பெரிய பலமே, அட்டாக் தான். 

டிபென்ஸ் பக்கம் வருவோம். இதுவரை நாம் பார்த்த போட்டிகளில், பிரேசில் டிபென்ஸ் மிராண்டாவை நம்பியே உள்ளது. அவருக்கு ஜோடியாக, மார்க்கினோஸ் அல்லது தியாகோ சில்வா மாறி மாறி விளையாடுகிறார்கள். இடதுபக்கம் மார்செலோ, வலதுபக்கம் டேனிலோ. மார்செலோ மற்றும் டெனிலோ, அநேக நேரங்களில் அட்டாக் செய்வதால், அவர்கள் விடும் கேப்களை கவர் செய்யும் பொறுப்பு, மிட்பீல்டு வீரர்களை சேரும். அதனால் தான், இதுவரை நாம் பார்த்த அனைத்து போட்டிகளிலும், கேசிமிரோ மற்றும் பாலினோ என இரண்டு டிபெண்டிங் மிட்பீல்டு வீரர்களை பயன்படுத்துகிறார் டீட்டே. 

பாலினோ மற்றும் கேசிமிரோ, அட்டாக் வீரர்களுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு திறமை கொண்டவர்கள் கிடையாது. அந்த பொறுப்பு பெரும்பாலும், குட்டினோ தோள்களில் வந்து விழுந்துவிடுகிறது. கடந்த ஆண்டு பார்சிலோனாவுக்காக மிகவும் சிறப்பாக விளையாடிய குட்டினோ, பெரிய அணிகளுக்கு எதிராக இந்த பொறுப்பை எப்படி எடுத்துச் செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மொத்தமாக பார்த்தால், அட்டாக் மற்றும் டிபென்ஸில் பிரேசில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் மிட்பீல்டு வீரர்கள் பலர் இருந்தும், எல்லா போட்டிகளிலும், கேசிமிரோ மற்றும் பாலினோ விளையாடுவது அணியின் க்ரியேட்டிவிட்டியை குறைத்து விடுகிறது. குரூப் போட்டிகள் முடியும் முன் அந்த பேலன்ஸை டீட்டே கண்டுகொண்டார் என்றால், பிரேசிலை தடுக்க ஆளில்லை.

உலகக் கோப்பையை வெல்லுமா பிரேசில்? ஒரு பார்வை!

கவனிக்க வேண்டிய வீரர்கள்: நெய்மார். கடந்த 4 ஆண்டுகளாக உலகின் டாப் 3 வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்றால் சும்மா ஒண்ணுமில்லை. சில நேரங்களில், விளையாட்டு பையனாக தேவையில்லாமல் ட்ரிக்ஸ் செய்வது, எதிரணி வீரர்களை வெறுப்பேற்றி, சண்டை போடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டாலும், முக்கியமான போட்டிகளில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க தவறியதில்லை... உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் உயரிய 'கோல்டன் பால்' விருதை பெற நெய்மாருக்கே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா பிரேசில்? பொறுத்திருந்து பாப்போம்.

 

நாளை நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் உலகக் கோப்பை வெற்றி வாய்ப்பை பற்றி பார்க்கலாம்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP