சுவாரஸ், குட்டினோ அசத்தல்; இறுதியில் பார்சிலோனா

சுவாரஸ் அசத்தல்; பார்சிலோனா இறுதி போட்டிக்கு தகுதி
 | 

சுவாரஸ், குட்டினோ அசத்தல்; இறுதியில் பார்சிலோனா


பார்சிலோனா வாலென்சியா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி போட்டியில் லூயிஸ் சுவாரஸ்ஸின் அசத்தல் ஆட்டத்தால், பார்சிலோனா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் பார்சிலோனா 1-0 என வென்றிருந்தது. இரண்டாவது போட்டியில் வாலென்சியா ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கியது.

முதல் பாதியில் வாலென்சியா சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கியது. அந்த அணியின் ரொட்ரிகோ தலையால் முட்டிய பந்து 13வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. தொடர்ந்து வாய்ப்புகளை வாலென்சியா உருவாக்க, பார்சிலோனா தவித்தது.

இரண்டாவது பாதியில், புதிதாக பார்சிலோனா வந்துள்ள குட்டினோ ஆட்டத்தில் நுழைந்தார். நுழைந்த 4வது நிமிடத்திலேயே சுவாரஸ் அசத்தலாக விளையாடி ஒரு பந்தை பாஸ் செய்ய, குட்டினோ அதை கோலாக்கி முன்னிலை கொடுத்தார். அதன் பின், 83வது நிமிடத்தில் சுவாரஸ் கொடுத்த மற்றொரு சூப்பர் பாசில், ராக்கிடிச் கோல் அடித்தார். இறுதியில் பார்சிலோனா 2-0 என இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து ஸ்பானிஷ் கோப்பையை வென்றுள்ள பார்சிலோனா அணி, 4வது முறையும் வென்றால் ஸ்பானிஷ் கோப்பை வரலாற்றில் அது புதிய சாதனையாக அமையும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP