கால்பந்து வீரரான உசேன் போல்ட்.. முதல் போட்டியிலேயே டபுள் கோல்!

தடகள போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று கால்பந்து வீரரான உசேன் போல்ட், தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா க்ளப் அணிக்காக 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
 | 

கால்பந்து வீரரான உசேன் போல்ட்.. முதல் போட்டியிலேயே டபுள் கோல்!

தடகள போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று கால்பந்து வீரரான உசேன் போல்ட், தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா க்ளப் அணிக்காக 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், 8 ஒலிம்பிக் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர், 200 மீட்டர், 4x 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் சர்வதேச சாதனையை தன் வசம் வைத்துள்ளார். ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற உசேன் போல்ட், கால்பந்தின் மீது தனக்கு இருந்தும் ஆர்வத்தை வளர்க்க, கால்பந்து வீரராக முயற்சி செய்தார். க்ளப் அணிகளுக்காக விளையாட ஆசைப்பட்ட போல்ட்டுக்கு ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

அந்த அணிக்காக தனது முதல் போட்டியில் இன்று விளையாடிய போல்ட், இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். போல்ட்டின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறினர். இது நட்பு போட்டி தான் என்றாலும், போல்ட்டின் திறமையை பார்த்து எதிரணி வீரர்கள் வாய் பிளந்து நின்றனர். ஓட்டப்பந்தயத்தில் மட்டும்மல்ல, கால்பந்திலும் போல்ட் பல சாதனைகள் புரிய காத்திருக்கிறார். ஆட்டத்தின் முடிவில் மெக்ஆர்த்தர் சவுத் வெஸ்ட் யுனைட்டட் அணியை போல்ட்டின் மரைனர்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP