திருச்சி: கல்லூரிகளுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி !

கல்லூரிகளுக்கிடையேயான 4வது மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. இதில் 14 கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இப்போட்டியானது, நாக்அவுட் முறையில் நடைபெற்று வருகிறது.
 | 

திருச்சி: கல்லூரிகளுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி !

கல்லூரிகளுக்கிடையேயான 4வது மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. இதில் 14 கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. 

கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகளின் மூலம் மாணவர்களின் திறமையினை மேம்படுத்திடும் வகையில் பொன்விழா கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. 4ம் ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, தேசியக்கல்லூரி, புனித வளனார் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, நாஸரேத் கல்லூரி, கோவை ஸ்ரீநாராயண குரு, ஜானகி அம்மாள் கல்லூரி, நேரு கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி, திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி ஆகிய 14 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இப்போட்டியானது, நாக்அவுட் முறையில் நடைபெற்று  வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் புனிதவளனார் கல்லூரி, கோபி கல்லூரியை 5-0என்ற கோல்கணக்கிலும், மற்றொரு போட்டியில் கோவை ஜானகியம்மாள் கல்லூரி, சென்னை நாசரேத் கல்லூரியை 4-0 என்ற கோல்கணக்கிலும் வீழ்த்தின. வெற்றிபெற்று முதல் 4இடங்களை பிடிக்கும் கல்லூரி அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை முறையே 20ஆயிரம். 15ஆயிரம், 10ஆயிரம் மற்றும் 7ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP