இந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த 25 - வது சீனியர் மகளிர் தேதிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற கால்பந்து வீரர்கள் மழை பெய்து தண்ணீர் தேங்கியிருந்த அரங்கத்தில் விளையாட சிரம பட்டு பெரும் அவதிக்குள்ளாயினர்.
 | 

25 - வது சீனியர் மகளிர் தேதிய சாம்பியன்ஷிப் போட்டி, அருணாச்சல பிரதேச மாநிலத்தில், பசிகத் மற்றும் சி.ஹெச்,எப் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய கால்பந்து வீரர்கள் மழை பெய்து தண்ணீர் தேங்கியிருந்த அரங்கத்தில் விளையாட முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
கர்நாடக மகளிர் கால்பந்துஅணியின் தலைவர் டான்வியா ஹன்ஸ் அவரது ட்விட்டர் பதிவில், "நாங்கள் நேற்று பீகார் அணியுடன் விளையாடி தோல்வியுற்றோம். ஆனால், அதை விட நாங்கள் விளையாடிய அரங்கத்தின் நிலை தான் எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய மகளிர் கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், "இவர்களும் இந்திய வீரர்களே, இந்தியாவிற்காக விளையாடுபவர்களே. ஒரு புரொபஷனல் வீரர் விளையாடும் திடல் இப்படி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல கால்பந்து வீரர்களும், ரசிகர்களும், இந்த நிலை கண்டு வருத்தம் தெரிவிக்கும் பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு புறம் இந்திய ஆண்கள் கால்பந்து வீரர்கள் கத்தாரில் கலக்கிக் கொண்டிருக்கும் போது, மகளிர் வீரர்களின் இந்நிலை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP