1. Home
  2. விளையாட்டு

"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்

"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்

நடைபெறவிருக்கும் ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளில், இந்திய கால்பந்து அணியை தேர்ந்தெடுக்க மறுத்துவிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கத்தை, இந்திய கால்பந்து கூட்டமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

ஏசியாட் எனப்படும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வீரர்களையும் அணிகளையும் தேர்ந்தெடுத்து வந்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். விளையாட்டுப் போட்டிகளில், ஆசிய அளவில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி தற்போது உள்ளது. இதனால் ஆசிய அளவில் 14வது இடத்தில் உள்ள இந்திய கால்பந்து அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டான கால்பந்தை 212 நாடுகள் விளையாடுகின்றன. ஆசிய அளவில் முதல் 5 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும். ஏசியன் கேம்ஸை விட உலகக் கோப்பையில் உள்ள போட்டி பன்மடங்கு கடினமாக இருக்கும். இந்த அடிப்படை விஷயங்களை கூட இந்திய ஒலிம்பிக் சங்கம் புரிந்து வைத்துக் கொள்ளவில்லை. இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு, தொலைநோக்கு பார்வையும் இல்லை, கால்பந்தை பற்றிய புரிதலும் இல்லை என தெளிவாக தெரிகிறது" என்றது.

1951 மற்றும் 1962ம் ஆண்டுகளில் இந்திய அணி ஏசியாட் கால்பந்து கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.,

கடந்த சில வருடங்களில், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ-லீக் போன்ற கால்பந்து தொடர்களால் பல நட்சத்திர வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். பிரபல ஏ.எஃப்.சி ஆகிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளிலும், இந்திய அணி முழு ஆதிக்கம் செல்துஹி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இப்படிப்பட்ட நிலையில், ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவெடுத்துள்ளது, இந்திய கால்பந்து அணி வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன், 1994ம் ஆண்டு ஆசியாட் போட்டிகளில் மட்டும் தான் இந்திய கால்பந்து அணி விளையாடாமல் இருந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like