ஜெர்மனி வெளியேற்றம்! மரண அடி கொடுத்தது தென் கொரியா...

நடப்பு உலக சாம்பியன்களான ஜெர்மனி, தென் கொரியாவுடனான 3வது குரூப் போட்டியில், அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் குரூப் எஃப்-பில் சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று, ஜெர்மனி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
 | 

முதல் போட்டியில் மெக்சிகோவுடன் தோற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஜெர்மனி. இரண்டாவது போட்டியில் ஸ்வீடனுடன் போராடி கடைசி நிமிட கோல் மூலம் வெற்றி பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த தென் கொரியாவை 3வது போட்டியில் வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இன்று இரு அணிகளும் மோதின. 

போட்டி துவங்கியது முதல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது ஜெர்மனி. பல வாய்ப்புகளை உருவாக்கி கோல் அடிக்க ஜெர்மன் வீரர்கள் முயற்சி செய்தனர். ஆனால்,  தென் கொரியாவின் கோல் கீப்பர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனியை கோல் அடிக்க விடாமல் செய்தார். போட்டி முடியும் நேரத்தில் 6 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 92வது நிமிடத்தில் தென் கொரியா ஒரு கார்னர் கிக் மூலம் கோல் அடித்தது. கோல் அடிக்க தொடர்ந்து ஜெர்மனி முயற்சி செய்ய,  அதை பயன்படுத்தி, 96வது நிமிடம் இரண்டாவது கோலும் அடித்து,ஜெர்மனியை நாக் அவுட் செய்தது தென் கொரியா.

இந்த முறையும் உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் ஜெர்மனி, குரூப் போட்டிகளிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP