1. Home
  2. விளையாட்டு

செர்பியாவை கடைசி நிமிடத்தில் வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து!

செர்பியாவை கடைசி நிமிடத்தில் வீழ்த்தியது ஸ்விட்சர்லாந்து!

செர்பியாவுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஸ்விட்சர்லாந்து கடைசி நிமிடத்தில் கோல் அடித்து, த்ரில் வெற்றி பெற்றது.

பலம்வாய்ந்த பிரேசில் உள்ள குரூப்பில் பங்கு கொண்டுள்ள செர்பியா மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகின்றன. முதல் போட்டியில் பிரேசிலுடன் டிரா செய்திருந்தது ஸ்விட்சர்லாந்து. அதேநேரம் கோஸ்டா ரிகாவை செர்பியா வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால், இரு அணிகளும் பலப்பரீட்சை செய்தன. போட்டி துவங்கிய 5வது நிமிடமே, செர்பியாவின் மிட்ரோவிச் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின் செர்பியா தொடர்ந்து, ஸ்விஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. முதல் பாதியில் ஸ்விஸ் வீரர்களால் போட்டியை சமன் செய்ய முடியவில்லை. ஆனால், இரண்டவது பாதியில் 57வது நிமிடத்தின் போது, ஸ்விட்சர்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷக்கிரி ஷாட் அடிக்க, அது செர்பிய வீரர்கள் மீது பட்டு ஜாக்காவின் கால்களில் விழுந்தது. அவர் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

போட்டி டிராவாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி போட்டியில், பிரேசிலுடன் மோதவுள்ள செர்பியா, இந்த போட்டியில் கட்டாயம் வெல்லவேண்டிய அவசியம் இருந்தால், செர்பிய வீரர்கள் முழு வீச்சில் கோல் அடிக்க முயற்சி செய்தனர். அந்த நேரம் பந்தை கடத்திச் சென்று அதிரடி கவுண்ட்டர் அட்டாக் செய்த ஷக்கிரி, 90வது நிமிடம் கோல் அடித்து ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற உதவினார்.

தற்போது முதல் இடத்தில் பிரேசில், இரண்டாவது இடத்தில் ஸ்விஸ் அணிகள் 4 புள்ளிகளுடன் உள்ளன. 3வது இடத்தில் செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like