தென் கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

உலகக் கோப்பையின் இன்று நடந்த போட்டியில், கத்துக்குட்டி தென் கொரியாவை ஐரோப்பிய அணியான ஸ்வீடன் போராடி வென்றது.
 | 

தென் கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

உலகக் கோப்பையின் இன்று நடந்த போட்டியில், கத்துக்குட்டி தென் கொரியாவை ஐரோப்பிய அணியான ஸ்வீடன் போராடி வென்றது. 

நட்சத்திர வீரர் ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச் இல்லாமல் இந்த உலகக் கோப்பையை எதிர்கொள்கிறது ஸ்வீடன். மெக்சிகோ தென் கொரியா ஜெர்மனி ஆகிய அணிகளை கொண்ட குரூப்பில் உள்ள  ஸ்வீடன், தென் கொரியாவுடன் இன்று முதல் போட்டியில் மோதியது. ஏற்கனவே ஜெர்மனியை மெக்சிகோ வீழ்த்தியுள்ளதால், முதல் போட்டியிலேயே பெரிய வெற்றி பெற்று குரூப்பில் முதலிடம் பிடிக்க ஸ்வீடனுக்கு வாய்ப்பு இருந்தது. 

தென் கொரியாவில் பிரபல வீரர் டாட்டன்ஹேம் அணிக்காக விளையாடும் சன் ஹியுங் மின்னை தவிர பெரிய வீரர்கள் கிடையாது. எனவே, ஆரம்பம் முதல் ஸ்வீடன் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. ஸ்வீடன் ஃபார்வார்டுகள் பல வாய்ப்புகளை உருவாக்கி தென் கொரியாவுக்கு சிரமம் கொடுத்தனர். ஆனால், சிறப்பாக டிபன்ட் செய்த தென் கொரியா, முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்க விடாமல் செய்தது. 

இரண்டாவது பாதியில், ஸ்வீடனின் லார்சன் பவுல் செய்யப்பட்டதை தொடர்ந்து நடுவர் வீடியோ மூலம் சரிபார்த்து பெனால்டி கொடுத்தார். அதை, ஸ்வீடன் கேப்டன் ஆண்ட்ரியாஸ் கிரான்க்கிவிஸ்ட் கோலாக்கி 65வது நிமிடத்தில் முன்னிலை கொடுத்தார். இறுதியில் தென் கொரியா கோல் அடிக்க கடும் முயற்சி செய்தது. ஆனால், அந்த அணி அடித்த எந்த ஷாட்டுமே கடைசி வரை ஸ்வீடன் கோல் கீப்பரை சிரமப்படுத்தவில்லை.

ஸ்வீடன் வெற்றியுடன் தனது உலகக் கோப்பை பயணத்தை துவக்கியுள்ளது. கடந்த 2014 உலகக் கோப்பையில் தகுதி பெற முடியாமல் போன ஸ்வீடன் ரசிகர்களுக்கு தங்கள் அணியின் சிறப்பான ஆட்டம் நல்ல ஊக்கத்தை தந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP