ஸ்வீடன் அதிரடி வெற்றி; தென் கொரியா தயவால் தப்பியது மெக்சிகோ!

நேற்று நடந்த உலகக் கோப்பை போட்டியில், ஸ்வீடனுடன் குரூப் எஃப்-பில் முதல் இடத்தில் இருந்த மெக்சிகோ மோதியது. முதல் போட்டியிலேயே ஜெர்மனியை வீழ்த்தி, இரண்டாவது போட்டியில் தென் கொரியாவையும் வீழ்த்தி சிறப்பான பார்மில் இருந்தது மெக்சிகோ. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற குரூப்களை விட கடும் போட்டி கொண்ட இந்த குரூப்பில் கடைசி போட்டி முடியும் வரை யாரும் நாக் அவுட் சுற்றுக்கு தேர்ச்சி பெறுவதாக இல்லை.
 | 

ஜெர்மனி, தென் கொரியாவை வீழ்த்தும் பட்சத்தில், ஸ்வீடன் மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் முன்னேற வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த போட்டியில் ஸ்வீடன் ஆரம்பம் முதல் கடும் வேகத்தில் ஆடியது. மெக்சிகோவால் ஸ்வீடனை சமாளிக்க முடியவில்லை. முதல் பாதி கோல் இல்லாமல் முடிந்தாலும், இரண்டவது பாதி துவங்கி ஐந்தே நிமிடத்தில் ஸ்வீடன் கோல் அடித்தது.

பதற்றமடைந்த மெக்சிகோ தொடர்ந்து பல தவறுகளை செய்யத் துவங்கியது. 62வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் செய்த பவுலால், ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில், கிராங்க்விஸ்ட் கோல் அடித்தார். 74வது நிமிடத்தில், மெக்சிகோ வீரர் எட்சன் ஆல்வாரெஸ் காலில் பட்டு அவரது கோலுக்கு உள்ளேயே பந்து சென்று ஓன் கோல் ஆனது. 3-0 என அசத்தல் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்குக்கான இடத்தை உறுதி செய்தது ஸ்வீடன்.

மெக்சிகோவுக்கு எதிராக ஸ்வீடன் 3 கோல்கள் அடித்ததனால், மற்ற போட்டியில் ஜெர்மனி, தென் கொரியாவை 1-0 என வீழ்த்தினாலே, ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தேர்ச்சி பெற்று, மெக்சிகோ வெளியேறிவிடும். இதனால், கடைசி நிமிடம் அரை நகம் கடித்துக் கொண்டிருந்தனர் மெக்சிகோ ரசிகர்கள். ஆனால், கடைசி நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து நடப்பு சாம்பியன்களான ஜெர்மனியை வீழ்த்தி, மெக்சிகோவின் உலகக் கோப்பை கனவை காப்பாற்றியது தென் கொரியா. 

குரூப் எஃப்-பில் இருந்து ஸ்வீடன் முதல் இடத்திலும், மெக்சிகோ இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP