1. Home
  2. விளையாட்டு

நெய்மாருக்கு நாளை அறுவைசிகிச்சை... மூன்று மாதம் ஓய்வுதான்: டாக்டர் பேட்டி

நெய்மாருக்கு நாளை அறுவைசிகிச்சை... மூன்று மாதம் ஓய்வுதான்: டாக்டர் பேட்டி

பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக மூன்று மாதங்களுக்கு நெய்மார் கால்பந்து விளையாட முடியாது என்று பிரேசில் அணி டாக்டர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரர்களில் ஒருவர் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த அவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் அணி 222 மில்லியன் யுரோவுக்குக் கைப்பற்றியது. இந்தநிலையில், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வந்த, நெய்மாருக்கு சில தினங்களுக்கு முன்பு பாதம் மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், கால்பந்தாட்டங்களில் இருந்து விலகி, நேற்று பிரேசில் திரும்பினார். விமானநிலையத்தில் சக்கர நாற்காலியில் நெய்மார் அமர்ந்திருக்கும் போட்டோ மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.


நெய்மாரை பரிசோதித்த பிரேசில் கால்பந்தாட்ட அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மார், "காயம் குணமாக நெய்மாருக்கு மூன்று மாதங்கள் ஆகும். அதுவரை அவர் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். அவருக்கு, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்குச் சனிக்கிழமை (3ம் தேதி) காலை அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. காயத்தில் இருந்து முழுமையாகக் குணம் அடைய இரண்டு முதல் இரண்டரை மாதங்கள் வரை ஆகும். எதுவாக இருந்தாலும் அறுவைசிகிச்சை முடிந்த பிறகுதான் சொல்ல முடியும்.

நெய்மார் சோகமாகவும், அப்செட் மனநிலையிலும் இருக்கிறார். ஆனாலும், வேறு வாய்ப்பு இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்" என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like