ஐஎஸ்எல்: சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி அறிவிப்பு

இந்தியன் சூப்பர் லீகின் ஐந்தாவது சீசன் போட்டி வருகிற 29ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. 12 சுற்றுகளில் 59 போட்டிகள் இடம் பெறுகின்றன. துவக்க போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
 | 

ஐஎஸ்எல்: சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி அறிவிப்பு

சுனில் சேத்ரி தலைமையிலான 25 பேர் கொண்ட பெங்களுரு எஃப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் சூப்பர் லீகின் ஐந்தாவது சீசன் போட்டி வருகிற 29ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. 12 சுற்றுகளில் 59 போட்டிகள் இடம் பெறுகின்றன. துவக்க போட்டியில் இரண்டு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

30ம் தேதி நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனிடையே 25 பேர் கொண்ட பெங்களூரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு சுனில் சேத்ரி தலைமை தாங்க உள்ளார். 5 இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். 12 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 

பெங்களூரு அணி:

கோல் கீப்பர்கள்: குர்ப்ரீத் சிங் சந்து, சோரம் போயிறேய் அங்கன்பா, ஆதித்யா பத்ரா (U21)

தடுப்பாட்டக்காரர்கள்: ராகுல் பிஹெகே, அல்பேர்ஸ்ட் சேர்ரம், சைருட் கிமா, ஜூனான் கோன்சலேஸ், ஹர்மந்ஜோத் சிங் காப்ரா, ரினோ அன்டோ, நிஷு குமார், அஷீர் அக்தர், குர்சிம்ரத் சிங் கில்.

நடுகள வீரர்கள்: எரிக் பார்தலு, கீன் பிரான்சிஸ் லெவிஸ், டிமாஸ் டெல்கடோ, பித்யானானதா சிங், போய்தங் ஹொக்கிப், பிரான்சிஸ்கோ க்ஸிஸ்க்கோ ஹெர்னாண்டஸ், அஜய் சேத்ரி (U21), அல்டமாஷ் சயீத்

முன்கள வீரர்கள்: நிக்கோலஸ் லடிஸ்லாவ் பெடோர் மிகு, சுனில் சேத்ரி, தொங்காசியம் ஹொக்கிப், உடந்தா சிங், செஞ்சொ கியெல்ட்ஷன்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP