இனி உயிரைக்கொடுத்து விளையாடுவோம்: இந்திய கேப்டன் சுனில் சேத்ரி

தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கிடைத்தால் உயிரைக்கொடுத்து விளையாடுவோம் என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 | 

இனி உயிரைக்கொடுத்து விளையாடுவோம்: இந்திய கேப்டன் சுனில் சேத்ரி

தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கிடைத்தால் உயிரைக்கொடுத்து விளையாடுவோம் என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கால்பந்து அணியை தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்கு கொண்டு சென்றவர் கேப்டன் சுனில் சேத்ரி. இவர் சில தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கால்பந்து போட்டிகளுக்கும் ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவிற்கு சச்சின்,  கோலி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
இதனையடுத்து சுனில் சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று நேற்று நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியை காண ரசிகர்கள் வருவார்களா? என்ற கேள்வி எழும்பியது. நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் முன்னரே விற்றுத்தீர்ந்த நிலையில் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். நேற்று நடந்த போட்டி தான் சுனில் சேத்ரியின் 100வது போட்டியாகும். 
இதில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் ரசிகர்கள் மைதானத்தில் இந்திய அணி வீரர்களை உற்சாகப்படுத்தினர். 
பின்னர் சேதர்ரி தனது ட்விட்டர் பக்தக்தில் இதுகுறித்து நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார். அதில், "இந்தியாவிற்காக விளையாடும் போது இது போன்ற ஆதரவு தொடர்ந்து கிடைத்தால் நிச்சயமாக மைதானத்தில் உயிரைக்கொடுத்து விளையாடுவோம். மைதானத்திற்கு வந்தும் வீட்டில் இருந்தும் உற்சாகப்படுத்தியவர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP