மெஸ்ஸி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி

இந்திய நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, நேற்று கென்யாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச அளவில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
 | 

மெஸ்ஸி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி

இந்திய நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, நேற்று கென்யாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச அளவில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார். 

கென்யா, நியூஸிலாந்து, சீன தாய்பேய் ஆகிய நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற கால்பந்து தொடரில், இந்தியா அசத்தலாக விளையாடி வெற்றிகளை குவித்தது. முக்கியமாக நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி தலைப்புச் செய்திகளை தன் வசப்படுத்தினார். முதல் போட்டியில், இந்தியா வெற்றி பெற, போட்டியை காண ரசிகர்கள் வராததால், சேத்ரி உருக்கமான ஒரு கோரிக்கையை சமூக வலைத்தளங்களில் வைத்தார். "நாங்கள் விளையாடுவது பிடிக்காவிட்டாலும், இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவாவது மைதானத்திற்க்கு வர வேண்டும்" என கோரிக்கை வைத்தார் சேத்ரி. 

இதைத் தொடர்ந்து, மும்பை மைதானத்திற்கு ரசிகர்கள் குவிந்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு கிடைக்க, இந்திய அணி புது உத்வேகத்துடன் ஆடியது. சுனில் சேத்ரி தனது 100வது போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் கோல் அடிக்க, இந்தியா இறுதி போட்டியில் கென்யாவுடன் நேற்று மோதியது. இதில் மீண்டும் சேத்ரி இரண்டு சூப்பர் கோல்கள் அடித்து, சர்வதேச அளவில் 101 போட்டிகளில் 64 கோல்கள் என்ற இலக்கை தொட்டார்.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 124 போட்டிகள் விளையாடி 64 கோல்கள் அடித்துள்ளதால்,  அவரது சாதனையை குறைந்த போட்டிகளிலேயே சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. இது இந்திய கால்பந்திற்கு கிடைத்துள்ள புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளில்,  இந்தியாவின் முழு பார்வையும் சுனில் சேத்ரியின் மீது இருக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP