மெஸ்ஸி சாதனையை முறியடித்த சுனில் சேத்ரி

ஆசிய கோப்பையை வென்று இந்திய கால்பந்து அணி சாதனைப்படைத்துள்ள நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் சேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
 | 

மெஸ்ஸி சாதனையை முறியடித்த சுனில் சேத்ரி

ஆசிய கோப்பையை வென்று இந்திய கால்பந்து அணி சாதனை படைத்துள்ள நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் சுனில் சேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். 

4வது முறையாக விளையாடும் இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசியக் கோப்பையில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதுடன், 33 ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து அசத்தினார்.

தாய்லாந்துக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம், சர்வதேச அரங்கில், தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, 65 கோல்கள் அடித்து 2வது இடத்தில் இருந்த அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை சுனில் சேத்ரி பின்னுக்குத் தள்ளினார்.

சுனில் சேத்ரி, மொத்தம் 67 கோல்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன், ஆசியக் கோப்பைத் தொடரில் அதிக கோல்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் சுனில் சேத்ரி பெற்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP