சுவாரஸ் ஹேட்ரிக்; ரியல் மாட்ரிட்டை கதறவிட்ட பார்சிலோனா!

உலகிலேயே மிகப்பெரிய க்ளப் அணிகளான ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய பிரபல 'எல் கிளாசிகோ' போட்டியில், லூயிஸ் சுவாரஸ் அசத்தல் ஹேட்ரிக் கோலடிக்க, பார்சிலோனா 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
 | 

சுவாரஸ் ஹேட்ரிக்; ரியல் மாட்ரிட்டை கதறவிட்ட பார்சிலோனா!

உலகிலேயே மிகப்பெரிய க்ளப் அணிகளான ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய பிரபல 'எல் கிளாசிகோ' போட்டியில், லூயிஸ் சுவாரஸ் அசத்தல் ஹேட்ரிக் கோலடிக்க, பார்சிலோனா 5-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கடந்த 5 ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை ரியல் மாட்ரிட்டும் (4), பார்சிலோனாவும்(1) வென்று, உலகின் தலைசிறந்த க்ளப் அணிகளாக விளங்கி வருகின்றன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பலம்வாய்ந்த இந்த இரு அணிகளும், மோதும் போட்டி, எல் கிளாசிகோ என அழைக்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டில் ஸ்பெயின் லீக் தொடரான லா லிகாவில் பார்சிலோனா முழு ஆதிக்கம் செலுத்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புதிய பயிற்சியாளர் லோபெட்குயிவின் கீழ், ரியல் மாட்ரிட் மோசமாக விளையாடி பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது. 

பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், இரு அணிகளும் மோதிய நெற்றியை போட்டியின் மீது எதிர்பார்ப்பு சற்று குறைந்தே இருந்தது. ஆனாலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இந்த போட்டியை கண்டு களித்தனர். போட்டி துவங்கியது முதல் பார்சிலோனா முழு ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து பல அட்டாக்குகளை செய்து பார்சிலோனா மிரட்ட, ரியல் மாட்ரிட் திணறியது. 11வது நிமிடத்தின் போது, பார்சிலோனாவின் குட்டினோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின், பார்சிலோனாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, சுவாரஸ் அதில் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.

இரண்டாவது பாதியில் மாட்ரிட்டின் மார்செலோ கோல் அடித்து, நம்பிக்கை கொடுத்தார். அதன்பின் மாட்ரிட் சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ரியல் மாட்ரிட் போட்டியை சமன் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்த நேரம், 75வது நிமிடத்தில், சுவாரஸ் மீண்டும் தலையால் முட்டி ஒரு சூப்பர் கோல் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, கோல் கீப்பரை தாண்டி பந்தை 'சிப்' செய்து ஹேட்ரிக் கோல்களை சுவாரஸ் பெற்றார். 87வது நிமிடத்தில், மாற்று வீரராக வந்த பார்சிலோனாவின் ஆர்டுரோ விடாலும் கோல் அடிக்க, 5-1 என ரியல் மாட்ரிட்டிடை துவம்சம் செய்தது பார்சிலோனா. 

இந்த வெற்றியால் லா லிகா பட்டியலில் பார்சிலோனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP