1. Home
  2. விளையாட்டு

அர்ஜென்டினாவை 6-1 என துவம்சம் செய்தது ஸ்பெயின்

அர்ஜென்டினாவை 6-1 என துவம்சம் செய்தது ஸ்பெயின்


நேற்று நடந்த நட்பு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினாவை ஸ்பெயின் 6-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.

கால்பந்து உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு தேசிய அணியும் தனது வீரர்களை நட்பு போட்டிகளில் விளையாட வைத்து சோதனை செய்து வருகின்றன. புதிய பயிற்சியாளர், புதிய யுக்திகள் என சோதனை கட்டத்தில் உள்ளது அர்ஜென்டினா அணி.

நேற்று நடந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், துவக்கம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 12வது நிமிடத்தில் கோஸ்டாவும் 27வது நிமிடத்தில் இஸ்கோவும் கோல் அடித்தனர். அர்ஜென்டினாவின் ஓட்டமெண்டி 39வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதி 2-1 என முடிந்தது.

பின்னர் அதிரடியாக விளையாடியது ஸ்பெயின். 52வது நிமிடத்தில் இஸ்கோ, 55வது நிமிடத்தில் தியாகோ கோலடிக்க, அர்ஜென்டினா திணறியது. அந்த அணியின் வீரர்கள் தெடர்ந்து பல தவறுகளை செய்தனர். 73வது நிமிடத்தில் ஸ்பெயினின் இயாகோ ஆஸ்பஸ் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே இஸ்கோ மீண்டும் கோல் அடித்து தனது முதல் ஹேட்ரிக்கை பூர்த்தி செய்தார்.

உலககோப்பைக்கு முன், இன்னும் ஒரே ஒரு நட்பு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடந்த முறை இறுதி போட்டி வரை சென்ற அர்ஜென்டினா அணி, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த உலகக்கோப்பையில் குரூப் போட்டிகளிலேயே வெளியேறிய ஸ்பெயின், தற்போது கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like