தெற்காசிய ஜூனியர் கால்பந்து: வெண்கலம் வென்றது இந்தியா

நேபாயம் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய அணிகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, நேபாள அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
 | 

தெற்காசிய ஜூனியர் கால்பந்து: வெண்கலம் வென்றது இந்தியா

காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய அணிகளுக்கான ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி நேபாள அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று நேபாள அணியும் இந்திய அணியும் மோதின. போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அதன்பின்னர் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இறுதியில் இந்தியா 1-0 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP