தெற்காசிய கோப்பை: இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது மாலத்தீவுகள்!

இந்தியா மாலத்தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கோப்பை இறுதி போட்டியில், மாலத்தீவுகள் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 | 

தெற்காசிய கோப்பை: இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது மாலத்தீவுகள்!

இந்தியா மாலத்தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கோப்பை இறுதி போட்டியில், மாலத்தீவுகள் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இளம் வீரர்களை மையமாக கொண்டு இந்த தொடரில் களமிறங்கிய இந்திய அணி, இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. 2015ம் ஆண்டு கோப்பையை வென்றது போலவே இந்த முறை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதானமாக விளையாடிய மாலத்தீவுகள், இந்தியாவின் திட்டங்களை தகர்த்தது. 

எதிர்பார்த்தது போல, இந்தியா அதிரடியாக விளையாட துவங்கியது. மன்வீர் சிங் மற்றும் சவுத்ரி சிறப்பாக அட்டாக் செய்தனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. 19வது நிமிடத்தில் மாலத்தீவுகள் அணியின் இப்ராஹிம் மஹூதி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி 1-0 என முடிந்தது. 

இந்திய அணி இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து அட்டாக் செய்து விளையாடியது. பல வாய்ப்புகள் உருவாக்கினாலும், மாலத்தீவு  வீரர்களின் டிபென்ஸ் மற்றும் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு, அனைத்து வாய்ப்புகளையும் தடுத்தனர். 66வது நிமிடத்தில், மாலத்தீவுகளின் அலி ஃபசீர் கோல் அடிக்க, அந்த அணி 2-0 என முன்னிலை பெற்றது. 

கடைசி வரை இந்தியா கோல் அடிக்க முயற்சி செய்தது. அதன் பலனாக, 90வது நிமிடத்தில், மாற்று வீரராக களமிறங்கிய சுமித் பாசி கோல் அடித்தார். போட்டி 2-1 என முடிந்தது. மாலத்தீவுகள் அணி இரண்டாவது முறை தெற்காசிய சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP