1. Home
  2. விளையாட்டு

தெற்காசிய கோப்பை இறுதி போட்டி: மாலத்தீவுகளை வீழ்த்துமா இந்தியா?

தெற்காசிய கோப்பை இறுதி போட்டி: மாலத்தீவுகளை வீழ்த்துமா இந்தியா?

தெற்காசிய கால்பந்து கோப்பை இறுதி போட்டியில், இன்று மாலத்தீவுகளை பலம்வாய்ந்த இந்திய அணி எதிர்கொள்கிறது. 8வது முறையாக இந்த கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மாலை 6.30 மணியளவில் வங்கதேசத்தின் தாக்கா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடரில் இரு அணிகளும் கடந்து வந்த பாதை, அவர்களது பலங்கள் பலவீனங்கள் குறித்து பார்க்கலாம்.

2015ம் ஆண்டு உட்பட 7 முறை தெற்காசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தமுறையும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருந்ததாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தொடரிலேயே, வீழ்த்தப்படாத ஒரே அணி, இந்திய அணி தான்.

குரூப் போட்டிகளில் மாலத்தீவு மற்றும் இலங்கையை 2-0 என வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி நாக் அவுட் செய்தது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் இன்று லல்லியன்ஜுவாலா சங்கட்டே விளையாட மாட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ரெட் கார்டு வாங்கியதால் இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துவிட்டார். அவரின் வேகம் இல்லாதது பெரிய இழப்பாக இருக்கும். அவர் இல்லாவிட்டாலும், தொடர்ந்து கோல் அடித்து எதிரணிகளை மிரட்டி வரும் மன்வீர் சிங்கை நம்பி இந்திய அணியின் அட்டாக் இருக்கும். அனிருத் தப்பா, வினித் ராய் கூட்டணியில் மிட்பீல்டும் பலமாக அமைந்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தானை தவிர எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக கோல் அடிக்க முடியவில்லை. அதனால், டிபென்ஸ் மீண்டும் சிறப்பான தடுப்பு அரணாக செயல்படும் என எதிர்பார்க்கலாம்.

குரூப் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல், டாஸ் மூலம் இலங்கையை தாண்டி அரையிறுதிக்கு வந்தது மாலத்தீவுகள். ஆனால், அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த நேபால் அணியை 3-0 என துவம்சம் செய்தது அசத்தியது. அந்த அணியின் இப்ராஹிம் ஹசான் இந்திய அணியின் தடுப்பு அரண்களை உடைக்க ஆவலாக இருப்பார். தனது அணி, மிகவும் சிறப்பாக விளையாடி உள்ளதாகவும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளதாகவும், மாலத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் பீட்டர் செகேர்ட் தெரிவித்துள்ளார்.

அனல் பறக்கும் போட்டியாக இருக்கும் என நிச்சயம் எதிர்பாக்கலாம்...

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like