எப்படியாவது தோக்கணும்; கோமாளித்தனத்துக்கு தயாராகும் இங்கிலாந்து vs பெல்ஜியம்!

2018 உலகக் கோப்பையில் குரூப் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாடு போட்டிகளில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து - பெல்ஜியம் மற்றும் கொலம்பியா - செனகல் ஆகிய அணிகள் மோதுகின்றன.
 | 

எப்படியாவது தோக்கணும்; கோமாளித்தனத்துக்கு தயாராகும் இங்கிலாந்து vs பெல்ஜியம்!

2018 உலகக் கோப்பையில் குரூப் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. கடைசியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு போட்டிகளில், இங்கிலாந்து - பெல்ஜியம் மற்றும் கொலம்பியா - செனகல் ஆகிய அணிகள் மோதுகின்றன. 

குரூப் ஜி-யில் தலா இரண்டு வெற்றிகளுடன், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பொதுவாக, முதல் இடத்தை பெறும் அணி, வேறொரு குரூப்பில் உள்ள இரண்டாவது அணியுடன் விளையாடும் என்ற காரணத்தால், எல்லா அணிகளும் முதலிடத்தை பிடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் இந்தமுறை, எல்லாம் தலைக்கீழாக மாறியுள்ளது. 

அர்ஜென்டினா, போர்ச்சுகல், போன்ற அணிகள் இரண்டாவது இடத்தில் முடித்துள்ளதால், பெரிய அணிகள் அனைத்தும் ரவுண்ட் ஆப் 16 நாக் அவுட் சுற்றில் ஒரே பக்கத்தில் விழுந்துள்ளன. மறு பக்கம், குரேஷியா, ஸ்வீடன், ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து போன்ற சிறிய அணிகள் உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணி, கடினமான பக்கத்தில், பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், உருகுவே ஆகியவையோடு மோதும் நிலை ஏற்படும். 

மற்றொரு பக்கம், ஸ்பெயினை தவிர மற்ற அனைத்து அணிகளும் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தை விட பலம் குறைந்தவையாகும். எனவே இந்த போட்டியில் ஜெயிக்கும் அணியை விட தோற்கும் அணி, பைனல் வரை செல்ல வாய்ப்பு அதிகம். அதனால் இரு அணிகளும் தங்களது நட்சத்திர வீரர்களை களமிறக்காமல், இரண்டாம் நிலை வீரர்களை கொண்டு விளையாட வாய்ப்பு அதிகம் உள்ளது. 

போட்டி கோல் எதுவும் இல்லாமல் டிரா ஆனால் கூட, இரு அணிகளையும் பிரிக்கும் முறை மிகவும் வினோதமானது. இரு அணிகளும் ஒரே அளவு கோல்கள் அடித்துள்ளனர். எதிரணிகளை ஒரே அளவு கோல்களை அடிக்க விட்டிருக்கின்றனர். எனவே கடைசி டை-ப்ரேக்கராக, இரு அணிகளில் எந்த அணி வீரர்கள் கம்மியாக பவுல் செய்து, குறைந்த அளவு ரெட் அல்லது மஞ்சள் கார்டு வாங்கியுள்ளனரோ, அந்த அணி முதலிடத்தை பிடிக்கும். எனவே இரண்டாவது இடத்தை பிடிக்கும் நோக்கோடு, இந்த போட்டியில் பல வீரர்கள் பவுல் செய்து அதிக மஞ்சள் கார்டுகளை வாங்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகக் கோப்பை துவங்கும் முன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இங்கிலாந்து - பெல்ஜியம் மோதலின் நிலை இப்படி கோமாளித்தனமாக மாறியுள்ளது, காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP