1. Home
  2. விளையாட்டு

பிரேசிலுக்கு ஷாக் கொடுத்த ஸ்விட்சர்லாந்து!

பிரேசிலுக்கு ஷாக் கொடுத்த ஸ்விட்சர்லாந்து!

உலகக் கோப்பையின் குரூப் Eயை சேர்ந்த பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டி, 1-1 என டிராவில் முடிந்தது.

தொடர் வெற்றிகளோடு, தென் அமெரிக்க நாடுகளின் தகுதிச் சுற்று போட்டிகளில் முதல் அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று, சிறப்பான பார்மில் உள்ள பிரேசில், ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதியது. நெய்மார், குட்டினோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. நெய்மாருக்கு காயம் என பயிற்சியாளர் முன்பு கூறியிருந்தார். ஆனால், அணியில் நெய்மாரும் சேர்க்கப்பட்டார்.

ஆரம்பம் முதலே, பிரேசில், ஸ்விட்சர்லாந்தை தொடர்ந்து தாக்கி ஆடியது. பல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஸ்விட்சர்லாந்து கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். ஆனால், 20வது நிமிடத்தின் போது, குட்டினோவிடம் பந்து கிடைக்க, அதை அவர் சுமார் 30 அடி தூரத்தில் இருந்து சுழற்றி கோலுக்குள் தள்ளி அட்டகாசம் செய்தார். பிரேசில் முன்னிலை பெற்றது. முதல் பாதி 1-0 என பிரேசிலுக்கு சாதகமாக முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கியது முதல், ஸ்விட்சர்லாந்து சிறப்பாக விளையாடியது. 50வது நிமிடத்தின் போது, ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், ஸ்டீவன் ஸூபர் கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து பிரேசில் டிபெண்டர்களை திணறவிட்டு பல வாய்ப்புகளை உருவாக்கினர் ஸ்விஸ் வீரர்கள். ஒரு கட்டத்தில் ஸ்விஸ் அணி மற்றொரு கோல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி முடிவை நெருங்க நெருங்க, பிரேசில் வீரர்கள் மீண்டும் கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-1 என டிரா ஆனது.

குரூப் Eல் முன்னதாக நடைபெற்ற போட்டியில் கோஸ்டா ரிகாவை செர்பியா வீழ்த்தியது. எனவே, செர்பியா முதலிடத்திலும், பிரேசில் மற்றும் ஸ்விஸ் அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like