1. Home
  2. விளையாட்டு

செனகல் போராடி தோல்வி; நாக் அவுட் சுற்றில் கொலம்பியா!

செனகல் போராடி தோல்வி; நாக் அவுட் சுற்றில் கொலம்பியா!

உலகக் கோப்பை குரூப் சுற்றின் கடைசி கட்ட போட்டிகளில், தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஆப்பிரிக்காவின் செனகல் அணியை 1-0 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

குரூப் எச்-சை சேர்ந்த ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரவுடன் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொலம்பியா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 3வது இடத்தில் இருந்தது. போலந்து 2 தோல்விகளால் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற கொலம்பியா, செனகல், மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், செனகலை கொலம்பியா எதிர்கொண்டது. மற்றொரு போட்டியில் போலந்துடன் ஜப்பான் மோதியது.

செனகல் - கொலம்பியா மோதிய போட்டியில், கொலம்பியா முதலில் இருந்தே கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால், கொலம்பியாவின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ராட்ரிகெஸ் காயம் காரணமாக முதல் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு பதில் மூரியல் களமிறங்கினார். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. தொடர்ந்து, கொலம்பியா கோல் அடிக்க முயற்சி செய்தாலும், மறுமுனையில் செனகல் தனது அதிரடியையும் காட்டியது. பல நல்ல வாய்ப்புகளை அந்த அணி உருவாக்க, கொலம்பியா கோல் கீப்பருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

74வது நிமிடத்தின் போது, கொலம்பியாவின் யேர்ரி மினா கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். அதன் பின் செனகல் அணி சிறப்பாக விளையாடினாலும், கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது.

மற்றொரு போட்டியில், போலந்து சிறப்பாக விளையாடி ஜப்பானை 1-0 என வீழ்த்தியது. ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையே, ஒரே அளவு புள்ளிகள், கோல் கணக்கு ஆகியவை அடித்திருந்தால், கடைசியாக, கம்மியாக பவுல் செய்து குறைந்த அளவு மஞ்சள் கார்டுகள் வாங்கிய ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

உலகக் கோப்பையின் வரலாற்றிலேயே, ஒரு அணி, பவுல் கணக்கை கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

newstm.in

Trending News

Latest News

You May Like