ரஷ்யா ஷாக் வெற்றி! நாக் அவுட் ஆனது ஸ்பெயின்...

உலகக் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், 2010ம் ஆண்டு சாம்பியன் ஸ்பெயினை கோப்பையை நடத்தும் நாடான ரஷ்யா பெனால்டி மூலம் வீழ்த்தியது.
 | 

ரஷ்யா ஷாக் வெற்றி! நாக் அவுட் ஆனது ஸ்பெயின்...

உலகக் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், 2010ம் ஆண்டு சாம்பியன் ஸ்பெயினை கோப்பையை நடத்தும் நாடான ரஷ்யா பெனால்டி மூலம் வீழ்த்தியது. 

நட்சத்திர வீரர்கள் கொண்ட ஸ்பெயின் அணியும் ரஷ்யாவும், காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதின. எதிர்பார்த்தது போலவே, நட்சத்திர அணியான ஸ்பெயின், போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. ரஷ்யாவும், ஸ்பெயின் அணியை கவுன்ட்டர் அட்டாக் மட்டுமே செய்து தடுக்க முயன்றது. 

போட்டியின் 12வது நிமிடத்தின் போது,  ஸ்பெயினுக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், ஸ்பெயின் வீரர் ராமோஸ் கோல் அடிக்க முயற்சி செய்ய, அவரை தடுக்க வந்த ரஷ்ய வீரர் இஃனாசெவிச், ஓன் கோல் அடித்தார். ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி 1-0 என முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா அட்டாக் செய்தது. அப்போது ஸ்பெயின் வீரர் பீக்கே, தனது கையால் ரஷ்ய வீரர் அடித்த பந்தை தடுத்தார். அதை பார்த்த நடுவர், பெனால்டி வாய்ப்பை ரஷ்யாவுக்கு கொடுத்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரஷ்ய வீரர் ஸியூபா கோல் அடித்தார். 

இரண்டாவது பாதியில் ரஷ்யா கோல் அடிக்க பெரிதாக முயற்சிக்கவில்லை. ஸ்பெயின் தொடர்ந்து அட்டாக் செய்து கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால்,  ரஷ்யா அதை தொடர்ந்து தடுத்து பின்னாலேயே இருந்தது. 90 நிமிடங்களில் போட்டி 1-1 என இருக்க, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கடைசியாக பெனால்டி ஷூட் நடத்தப்பட்டது. 

அதில், ரஷ்யா வீரர்கள் அனைத்து வாய்ப்புகளையும் கோலுக்குள் தள்ளினர். ஆனால், ஸ்பெயின் வீரர்கள் கோக்கே மற்றும் ஆஸ்பாஸ் அடித்த ஷாட்களை, ரஷ்யா கோல் கீப்பர் அகின்ஃபீவ் சூப்பராக தடுத்து, ரஷ்யா வெற்றி பெற உதவினார். 

52 வருடங்களுக்கு பிறகு ரஷ்யா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP