எகிப்துக்கு செக் வைத்தது ரஷ்யா; முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி!

இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில், எகிப்தை 3-1 என வீழ்த்திய ரஷ்யா, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 | 

எகிப்துக்கு செக் வைத்தது ரஷ்யா; முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கும் தகுதி!

இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில், எகிப்தை 3-1 என வீழ்த்திய ரஷ்யா, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் போட்டிகளில் முதல் சுற்று முடிந்து, இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில், எகிப்து அணியை ரஷ்யா எதிர்கொண்டது. முதல் போட்டியில் சவுதி அரேபியாவை 5-0 என பந்தாடிய ரஷ்யா, உருகுவேயிடம் கடைசி நிமிடத்தில் தோற்ற எகிப்துடன் மோதியது. முதல் போட்டியில் நட்சத்திர வீரர் சாலா இல்லாமல் களமிறங்கிய எகிப்து, இந்த முறை சாலாவை களமிறக்கியது. எகிப்து அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி என்பதால், துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்தது. ஆனால், ரஷ்யா மிக சிறப்பாக டிபண்ட் செய்து எகிப்தின் அட்டாக்கை தடுத்தது. 

முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதி துவங்கிய உடனேயே, ரஷ்யா செய்த அட்டாக்கில், அந்த அணியின் ஸோப்னின் நீண்ட தூரத்தில் இருந்து ஷாட் அடித்தார். ஆனால், பந்து எகிப்தின் அல் பாத்தியின் காலில் பட்டு, ஓன் கோலாக மாறியது. இந்த உலகக் கோப்பையில் விழுந்துள்ள 5வது ஓன் கோல் இதுவாகும். பின்னர் தொடர்ந்து அட்டாக் செய்து வந்த ரஷ்யாவின் செரிஷெவ், 57வது நிமிடத்தில் கோல் அடித்து 2-0 என ரஷ்யாவுக்கு முன்னிலை கொடுத்தார். 

எகிப்து கடும் முயற்சி எடுத்து வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், 62வது நிமிடத்தில், ரஷ்யாவின் ஆர்டம் ஸியுபா, நீண்ட தூரத்தில் இருந்து வந்த பாஸை அருமையாக கட்டுப்படுத்தி, கோல் அடித்து 3-0 என ஆக்கினார். 73வது நிமிடத்தில், எகிப்தின் சாலா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். அதன்பின் ரஷ்யா கட்டுப்பாடுடன் விளையாடி, போட்டியை 3-1 என முடித்தது. 

இந்த வெற்றியை தொடர்ந்து, 2 போட்டிகளில், 2 வெற்றி, 8 கோல்கள் அடித்துள்ள ரஷ்யா, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சவுதி அரேபியாவுக்கு எதிராக உருகுவே நாளை விளையாடும் போட்டி டிரா ஆனாலோ, உருகுவே வென்றாலோ, எகிப்தின் உலகக் கோப்பை கனவு முடிந்துவிடும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP