1. Home
  2. விளையாட்டு

காயத்தால் வெளியேறிய ரொனால்டோ: உலகக் கோப்பையில் பங்கேற்பாரா?



கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதால், அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கிளப் கால்பந்தின் மிகப்பெரிய தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டிக்கு ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற பிரபல எல் க்ளாசிக்கோ போட்டியில், பார்சிலோனாவுடன் ரியல் மாட்ரிட் மோதியது. 15வது நிமிடத்தில் கோல் அடித்த ரொனால்டோவுக்கு பின்னர் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிறிது நேரம் விளையாடிய அவர், முதல் பாதியின் முடிவில் வெளியேற்றப்பட்டார். காலில் ஏற்பட்ட காயம் பெரிதாகிவிடக் கூடாது என்ற காரணத்தால், முன்னெச்சரிக்கையாக அவர் வெளியேற்றப்பட்டதாக, மாட்ரிட் அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் 26ம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் அவர் நிச்சயம் விளையாட வேண்டும் என்ற காரணத்தால், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு இடையில் 3 ஸ்பானிஷ் லீக் போட்டிகளில் ரியல் மாட்ரிட் விளையாடவுள்ள நிலையில், ரொனால்டோ அதில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும், அடுத்த மாதம் கால்பந்து உலகக் கோப்பை துவங்குவதால், அதில் அவர் முழு தகுதியுடன் பங்கேற்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஸிடேன் இதுகுறித்து பேசியபோது, "சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில், ரொனால்டோ 150% முழு தகுதியுடன் பங்கேற்பார்" என கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like