அதகளம் செய்த ரொனால்டோ; மாட்ரிட் சூப்பர் வெற்றி!

சாம்பியன்ஸ் கோப்பை காலிறுதி போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க, ஜுவென்ட்ஸ் அணியை ரியல் மாட்ரிட் 3-0 என வீழ்த்தியது.
 | 

அதகளம் செய்த ரொனால்டோ; மாட்ரிட் சூப்பர் வெற்றி!

அதகளம் செய்த ரொனால்டோ; மாட்ரிட் சூப்பர் வெற்றி!

சாம்பியன்ஸ் கோப்பை காலிறுதி போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க, ஜுவென்டஸ் அணியை ரியல் மாட்ரிட் 3-0 என வீழ்த்தியது. 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், ஸ்பெயின் நாட்டின் க்ளப் அணியான ரியல் மாட்ரிட்டுடன் இத்தாலியின் ஜுவென்டஸ் மோதியது. இரண்டு போட்டிகளாக நடக்கும் காலிறுதி சுற்றின் முதல் போட்டி, இத்தாலியில் நடந்தது. போட்டி துவங்கி 3வது நிமிடமே ரொனால்டோ கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.


அதன்பின், ஜுவென்டஸுக்கு பல கோல் வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதிக்கு பின், மீண்டும் ஜுவென்டஸ் சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால்,  64வது நிமிடத்தில், ரொனால்டோ அசத்தலாக பைசைக்கிள் கிக் கோல் அடித்தார். இதை பார்த்த எதிரணி ரசிகர்கள் கூட கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பின் ஜுவென்டஸின் நட்சத்திர வீரர் டிபாலா, ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். 72வது நிமிடத்தில் மாட்ரிட் வீரர் மார்செலோ கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த சுற்றின் அடுத்த போட்டியில் ஜுவென்டஸ், 4-0 என வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP