ரியல் மாட்ரிட்டை விட்டு ஜூவென்டஸ் சென்றார் ரொனால்டோ!

பிரபல ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜூவென்டஸ் அணியில் சேரும் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
 | 

ரியல் மாட்ரிட்டை விட்டு ஜூவென்டஸ் சென்றார் ரொனால்டோ!

பிரபல ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜூவென்டஸ் அணியில் சேரும் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

2009ம் ஆண்டு, கால்பந்து வரலாற்றின் மிக அதிக தொகைக்கு மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அவரை வாங்கியது. அதன்பின், க்ளப் கால்பந்தில் மிக உயரிய பரிசான சாம்பியன்ஸ் கோப்பையை, ரியல் மாட்ரிட்டுடன் 4 முறை அவர் வென்றுள்ளார். தலா 2 முறை ஸ்பானிஷ் லீக், மற்றும் கோப்பையையும் வென்றுள்ளார். 2013,14,16,17 ஆகிய ஆண்டுகளில் ஃபிஃபா கோல்டன் பந்து விருதையும் பெற்று ள்ளார். சமீபத்தில் அவருக்கும் ரியல் மாட்ரிட் க்ளப் தலைவருக்கும் பல விஷயங்களில் மனக்கசப்பு இருந்து வந்தது. இந்த ஆண்டு தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை ரியல் மாட்ரிட் வென்று சாதனை படைத்தது. போட்டி முடிந்தவுடன், தனது வருங்காலம் பற்றி யோசித்து முடிவெடுக்க உள்ளதாக ரொனால்டோ கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களில், ரொனால்டோ இத்தாலி நாட்டின் சாம்பியன்களான ஜூவென்டஸ் அணியில் சேர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரொனால்டோவை ஜூவென்டஸ் வாங்கியிருப்பதாக ரியல் மாட்ரிட் உறுதி செய்துள்ளது. சுமார் 100 மில்லியன் பவுண்ட் கொடுத்து ரொனால்டோவை ஜூவென்டஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP