மொரோக்கோவை நாக் அவுட் செய்தார் ரொனால்டோ!

உலகக் கோப்பையின் குரூப் பி-யில் போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ மோதிய போட்டியில் ரொனால்டோ அடித்த கோலால் போர்ச்சுகல் 1-0 என வெற்றி பெற்றது.
 | 

மொரோக்கோவை நாக் அவுட் செய்தார் ரொனால்டோ!

உலகக் கோப்பையின் குரூப் பி-யில் போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ மோதிய போட்டியில் ரொனால்டோ அடித்த கோலால் போர்ச்சுகல் 1-0 என வெற்றி பெற்றது. 

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் ஹேட்ரிக் அடித்து அசத்திய ரொனால்டோ, இந்த போட்டியிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்த ரொனால்டோ, தனது சூப்பர் க்ளப் ஃபார்மை, தேசிய அணிக்காகவும் கொண்டு வந்து பலம்வாய்ந்த ஸ்பெயினுக்கு எதிராக 3 கோல்கள் அடித்தார். முதல் போட்டியில், ஈரானுக்கு எதிராக கடுமையாக போராடி கடைசி நிமிட கோலால் தோற்றது மொரோக்கோ. 

இந்த போட்டியில் தோற்றால், உலகக் கோப்பையை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் மொரோக்கோவுக்கு இது வாழ்வா சாவா போட்டி. ஆனால், போட்டி துவங்கிய 3வது நிமிடமே, ரொனால்டோ கோல் அடித்தார். கார்னர் கிக் வாய்ப்பு கிடைக்க, பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார் ரொனால்டோ. அதன் பின், மொரோக்கோ கடும் முயற்சி செய்தது. முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு, மொரோக்கோ முழு ஆதிக்கம் செலுத்தியது. மொரோக்கோ வீரர்கள் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கி போர்ச்சுகல்லை மிரட்டினர். ஆனால், கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது. 

4 புள்ளிகளுடன் குரூப் பி-யில் முதலிடத்தை போர்ச்சுகல் பிடித்துள்ளது. அடுத்த குரூப் பி போட்டியில், ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் ஏற்கனவே ஒரு போட்டியில் டிரா செய்து 1 புள்ளியுடனும், ஈரான் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடனும் உள்ளன. எனவே, மொரோக்கோ தனது அடுத்த போட்டியில் பல கோல்கள் அடித்து வெற்றி பெற்றால் கூட, நாக் அவுட் சுற்றுக்கு இனி முன்னேற முடியாது. முதல் இரண்டு போட்டிகளையே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதால் கண்ணீருடன் சென்றனர் மொரோக்கோ வீரர்கள். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP