ரொனால்டோ தொடர்ந்து விளையாடுவார்: பயிற்சியாளர்

ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவர் தொடர்ந்து விளையாடுவார் என பயிற்சியாளர் மேக்ஸ் அலெக்ரி தெரிவித்துள்ளார்.
 | 

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2009ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு வந்திருந்தபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டினார். ரொனால்டோவுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. வன்கொடுமை செய்துவிட்டு, அதை மூடி மறைக்க, தனக்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டியுள்ள பெண்ணுடன், அவரின் விருப்பதோடுதான் உறவுகொண்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மூடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர் லாஸ் வேகாஸ் போலீசார். 

இந்நிலையில், ஒரு வார இடைவேளைக்கு பிறகு, க்ளப் கால்பந்து போட்டிகள் இன்று மீண்டும் துவங்குகின்றன. இத்தாலியின் ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, இந்த வழக்கின் காரணமாக, போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள ஜுவென்டஸ் அணியின் பயிற்சியாளர் மேக்ஸ் அலெக்ரி, "அவர் மிகவும் கட்டுப்பாடுடன் கடினமாக உழைத்து வருகிறார். தொடர்ந்து விளையாடுவார். அவரது தனிப்பட்ட விவகாரங்களை பற்றி நான் பேசவேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP