1. Home
  2. விளையாட்டு

ஹேட்ட்ரிக் க்ளப் உலகக் கோப்பையை வென்று ரியல் மாட்ரிட் சாதனை!

ஹேட்ட்ரிக் க்ளப் உலகக் கோப்பையை வென்று ரியல் மாட்ரிட் சாதனை!

அபு தாபியில் நடைபெற்ற கால்பந்து க்ளப் உலகக் கோப்பை தொடரில், ஐரோப்பிய சாம்பியன்களான ரியல் மாட்ரிட், அபு தாபியை சேர்ந்த அல்-அய்ன் அணியை 4-1 என வீழ்த்தி, தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

2000ல் இருந்து, பல்வேறு கண்டங்களில் உள்ள சிறந்த க்ளப் அணிகள் போட்டியிடும் க்ளப் உலகக் கோப்பை தொடரை ஃபிபா நடத்தி வருகிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஓஷியானா, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் நடைபெறும் சாம்பியன்ஷிப் தொடர்களில் வெற்றி பெரும் க்ளப் அணிகள் இதில் போட்டியிடுவார்கள். பலம்வாய்ந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் வெற்றியாளர்கள் பெரும்பாலும் இந்த தொடரில் வெற்றி பெறுவது வழக்கம். இதுவரை ஐரோப்பிய அணிகள் 10 முறை இந்த தொடரை கைப்பற்றியுள்ளனர். அதிகபட்சமாக பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள், தலா 3 முறை வென்றுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஐரோப்பிய சாம்பியன்களான ரியல் மாட்ரிட், மீண்டும் க்ளப் உலகக்கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, அரையிறுதியில் ஜப்பானை சேர்ந்த கஷிமா ஆன்ட்லர்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில், அல் அய்ன் அணியுடன் ரியல் மாட்ரிட் நேற்று மோதியது.

14வது நிமிடத்தின் போது, ரியல் மாட்ரிட்டின் லூக்கா மாட்ரிச், சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 60வது நிமிடத்தில் மார்கோஸ் லாரன்டே, 78வது நிமிடத்தில் செர்ஜியோ ராமோஸ் கோல் அடிக்க, 86வது நிமிடத்தில் அல்-அய்ன் அணியின் ஷியோட்டனி கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி வினாடிகளில், ரியல் மாட்ரிட்டின் இளம் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடிக்க, போட்டி 4-1 என முடிந்தது.

2014ம் ஆண்டு க்ளப் உலகக் கோப்பையை வென்றிருந்த ரியல் மாட்ரிட், 2016, 2017, 2018வது ஆண்டும் அதை கைப்பற்றி, அதிக முறை க்ளப் உலகக் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்தது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like