கத்துக்குட்டியிடம் தோற்று நாக் அவுட்டான ரியல் மாட்ரிட்

கத்துக்குட்டியிடம் தோற்று நாக் அவுட்டான ரியல் மாட்ரிட்
 | 

கத்துக்குட்டியிடம் தோற்று நாக் அவுட்டான ரியல் மாட்ரிட்


ஐரோப்பிய சாம்பியன்களான ரியல் மாட்ரிட் அணி, 'ஸ்பானிஷ் கப்' கால்பந்து கோப்பையின் காலிறுதி போட்டியில் லெகானஸ் என்ற சிறிய அணிக்கு எதிராக விளையாடியது. இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, 1-0 என வென்றிருந்தது. இரண்டாவது போட்டி, மாட்ரிட்டின் சொந்த மண்ணில் நேற்று நடைபெற்றது.

இதில், மாட்ரிட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக லெகானஸ் அணியின் ஜாவியர் எராசோ முதல் கோல் அடித்தார். இரண்டாவது பாதியை சிறப்பாக துவக்கிய ரியல் மாட்ரிட் அணியின் பென்சிமா, 47வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். 

ரியல் மாட்ரிட் அணி அடுத்த சுற்றுக்கு நிச்சயம் முன்னேறும் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், 55வது நிமிடத்தில் ஒரு கார்னர் வாய்ப்பை பிரெஸ் கோலாக்கினார். இறுதியில் 2-1 என போட்டி முடிந்தது.

இரண்டு போட்டிகளின் முடிவில், இரண்டு அணிகளும் சமமாக கோல்கள் அடித்திருந்தால், எதிரணியின் மைதானத்தில் எந்த அணி அதிக கோல் அடித்ததோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், என்ற விதி உண்டு. அதனால், மாட்ரிட்டின் மைதானத்தில் இரண்டு கோல்கள் அடித்திருந்த லெகானஸ் அணி, ஸ்பானிஷ் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஏற்கனவே, ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியில், ரியல் மாட்ரிட் அணி 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP