சொதப்பிய கோல் கீப்பர்.. மீண்டும் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில், பாயர்ன் முனிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ரியல் மாட்ரிட் முன்னேறியது.
 | 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டி, முனிச்சில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் முனிச் 2-1 என தோல்வியடைந்தது. மாட்ரிட்டில் நடந்த இரண்டாவது போட்டியில், ரியல் மாட்ரிட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் முனிச் விளையாடியது. 

ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடிய முனிச் அணியின் கிம்மிச், 3வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே ரியல் மாட்ரிட்டின் பென்சிமா, கோல் அடித்து சமன் செய்தார். முதல் பாதி 1-1 என முடிந்தது. 

இரண்டாவது பாதி துவங்கிய சில நொடிகளில், முனிச் அணியின் கோல்கீப்பர் உல்ரிக் சறுக்கி விழுந்து, பந்தை பென்சிமாவிடம் கொடுத்தார். ஆளில்லாத கோல் போஸ்டுக்குள் பந்தை அடித்து 2-1 என முன்னிலை கொடுத்தார் பென்சிமா. பின்னர் 63வது நிமிடத்தில், முனிச் அணியின், ஜேம்ஸ் ராட்ரிகெஸ், கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அதன்பின் முனிச்சால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 2-2 என முடிந்தது. இரண்டு போட்டிகளையும் சேர்த்து 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற ரியல் மாட்ரிட், இறுதி போட்டிக்கு தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றது. 

2016, 2017ம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ள ரியல் மாட்ரிட், 3வது முறையாக அதை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP