பாயர்ன் மூனிச்சை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பையின் அரையிறுதி போட்டியில், நேற்று ரியல் மாட்ரிட் பாயர்ன் மூனிச் அணியை 2-1 என வீழ்த்தியது.
 | 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் இந்த சுற்றின் முதல் போட்டி, ஜெர்மனியின் மூனிச்சில் நடைபெற்றது. துவக்கம் முதலே தனது சொந்த ரசிகர்கள் முன்னால் கலக்கலாக விளையாடியது பாயர்ன். 27வது நிமிடத்தில், பாயர்னின் ஜோஷுவா கிம்மிச் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

ஆனால், முதல் பாதி முடியும் நிலையில், 43வது நிமிடத்தின் போது, மாட்ரிட்டின் மார்செலோ கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். சுமார் 25 அடி வெளியே இருந்து அவர் பந்தை கோலுக்குள் அடித்தார். அதன்பின், இரண்டாம் பாதியிலும் பல வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கியது பாயர்ன். ஆனால், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.   

பொறுமையாக இருந்த ரியல் மாட்ரிட் 56வது நிமிடத்தில், மீண்டும் கோல் அடித்தது. பாயர்ன் வீரர் ரபீனா செய்த தவறால், அசென்சியோவுக்கு எளிதான வாய்ப்பு கிடைக்க அவர் கோல் அடித்தார். போட்டி 2-1 என முடிந்தது. இரண்டாவது போட்டி அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மாட்ரிட்டில் நடைபெறுகிறது. 

அந்த போட்டியில், பாயர்ன் இரண்டு கோல்களாவது அடித்தால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP