குரேஷியா த்ரில் வெற்றி; கடைசி வரை போராடி தோற்றது டென்மார்க்!

உலகக் கோப்பை கால்பந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், டென்மார்க்கை, குரேஷியா பெனால்டி ஷூட் வரை சென்று நாக் அவுட் செய்துள்ளது.
 | 

குரேஷியா த்ரில் வெற்றி; கடைசி வரை போராடி தோற்றது டென்மார்க்!

உலகக் கோப்பை கால்பந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ரவுண்ட் ஆப் 16 சுற்றில், டென்மார்க்கை, குரேஷியா பெனால்டி ஷூட் வரை சென்று நாக் அவுட் செய்துள்ளது. 

இரண்டு ஐரோப்பிய அணிகளும், யாருமே எதிர்பார்காதவாறு மிக சிறப்பாக விளையாடி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அர்ஜென்டினாவை 3-0 என வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது குரேஷியா. அதேநேரம், பிரான்ஸ், பெரூ ஆகிய அணிகள் உள்ள குரூப்பில், ஒரு போட்டியில் கூட தோற்காமல் முன்னேறியது டென்மார்க். 

இரண்டு ஐரோப்பிய அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வந்ததால், இந்த போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். போட்டி துவங்கிய முதல் நிமிடமே, கார்னர் கிக் வாய்ப்பு மூலம் கோல் அடித்தது டென்மார்க். வெறும் 55 வினாடிகளிலேயே அடிக்கப்பட்ட இந்த கோல் தான், 2018 உலகக் கோப்பையின் மிக விரைவான கோலாகும். கண நேரத்தில் ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் அடுத்த சில நிமிடங்களில் அதை கோட்டை விட்டது டென்மார்க். 

குரேஷிய வீரர்கள் செய்த அட்டாக்கில் டென்மார்க் டிபென்ஸ் நிலைகுலைந்து போக, 4வது நிமிடத்தில் எளிதாக கோல் அடித்தார் மாண்ட்சுகிச். அதன்பிறகு இரு அணிகளும் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆனால், யாரும் முன்னிலை பெறவில்லை. 90 நிமிடங்களில் இரு அணிகளும் சமனாக இருந்ததால் போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதில் 115வது நிமிடத்தின் போது, குரேஷியாவின் மாட்ரிச் கொடுத்த சூப்பர் பாஸை வாங்கிய அந்த அணியின் ரெபிச், டென்மார்க் கோல் கீப்பரை தாண்டிச் சென்று, பந்தை காலியான கோல் போஸ்ட்டுக்குள் அடிக்க முயற்சி செய்தார். அப்போது பின்னால் இருந்து பவுல் செய்தார் டென்மார்க்கின் ஜோர்கென்சன். அதை தொடர்ந்து குரேஷியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை அந்த அணியின் நட்சத்திர வீரர் மாட்ரிச் அடிக்க, டென்மார்க் கோல் கீப்பர் ஷ்மைக்கல் தடுத்தார். போட்டி மீண்டும் 1-1 என சமனாகவே முடிந்தது. 

பின்னர் பெனால்டி ஷூட் நடத்தப்பட்டது. அதில், டென்மார்க்கின் எரிக்சன், ஷ்கோன், ஜோர்கென்சன் ஆகியோர் வாய்ப்பை கோட்டைவிட , குரேஷியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP