பிரீமியர் லீக்: மான்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல் டிரா!

பிரீமியர் லீக் தொடரில் பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் ஆர்சனல் அணிகள் மோதிய போட்டியில், சிறப்பாக விளையாடிய ஆர்சனல் அணியை 2-2 என டிரா செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்.
 | 

பிரீமியர் லீக்: மான்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல் டிரா!

பிரீமியர் லீக் தொடரில் பலம்வாய்ந்த மான்செஸ்டர் யுனைட்டட், ஆர்சனல் அணிகள் மோதிய போட்டியில், சிறப்பாக விளையாடிய ஆர்சனல் அணியை 2-2 என டிரா செய்து ஷாக் கொடுத்தது மான்செஸ்டர் யுனைட்டட். 

உலகிலேயே பிரபலமான பிரீமியர் லீக் க்ளப் கால்பந்து தொடரில், 4வது இடத்தில் இருந்த ஆர்சனல் அணி, 7வது இடத்தில் திணறி வரும் மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் மோதியது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், புதிய எழுச்சி பெற்றுள்ள ஆர்சனல், யுனைட்டட்டின் மோசமான பார்மை பயன்படுத்தி வெற்றி பெறும் உத்வேகத்தில் களமிறங்கியது. 

ஆட்டம் துவங்கிய 26வது நிமிடத்தில், ஆர்சனல் அணிக்கு கிடைத்த ஒரு கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, முஸ்தாபி பந்தை தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார். அதை கோல் போஸ்ட்டுக்குள் நின்ற யுனைட்டட் வீரர் தடுத்து வெளியே தள்ளினார். ஆனால், பந்து எல்லையை தாண்டி உள்ளே சென்றதாக உறுதி செய்யப்பட்டு கோல் வழங்கப்பட்டது. ஆர்சனல் முன்னிலை பெற்றது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 30வது நிமிடத்தில், ஆர்சனல் டிபென்ஸ் வீரர்கள் சொதப்ப, மார்ஷியல் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 2வது பாதியில், யுனைட்டட் வீரர் ரோஹோ செய்த தவறை பயன்படுத்தி, லகாசட் கோல் அடித்தார். பந்து ரோஹோவின் கால்களிலேயே பட்டு சென்றதால், ஓன் கோலாக அறிவிக்கப்பட்டது. 

அடுத்த நிமிடமே யுனைட்டட் அணியினர் அதிரடியாக தாக்கி கோல் அடிக்க முயற்சி செய்தனர். அப்போது, ஆர்சனல் வீரர்கள் மீண்டும் சொதப்ப, லிங்கார்டு கோல் அடித்து போட்டியை மீண்டும் சமன் செய்தார். 2-2 என போட்டி முடிவுக்கு வந்தது. 

லண்டனை சேர்ந்த டாட்டன்ஹேம் அணி வெற்றி பெற, 3வது இடத்திற்கு முன்னேறியது. ஆர்சனல் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. யுனைட்டட் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP