பாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, ப்ரெஞ்சு சாம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மனை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 தொடரில் 3-1 என த்ரில் வெற்றி பெற்று நாக் அவுட் செய்தது.
 | 

பாரிசை துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைட்டட்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி, ப்ரெஞ்சு சாம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மனை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 தொடரில் 3-1 என த்ரில் வெற்றி பெற்று நாக் அவுட் செய்தது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி கடந்த சில வாரங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் ஜோஸ் முறினோ அணியை விட்டு விலகிய பிறகு, தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சோல்சாரின் கீழ் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. இங்கிலாந்தில் வெற்றி பெற்றாலும், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் யுனைட்டடுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பலம்வாய்ந்த பார்ஸ் அணி நெய்மார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16  சுற்றின் முதல் போட்டியில்,  அட்டகாசமாக விளையாடி 2 - 0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் வென்றது. பாரிஸில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் பாரிஸ் நிச்சயம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுனைட்டட் அணி இரண்டாவது நிமிடமே கோல் அடித்தது. பாரிஸ் டிபென்ஸ் செய்த தவறை பயன்படுத்தி யுனைட்டட் அணியின் லுக்காக்கு கோல் அடித்தார். அசத்தலாக விளையாடிய பாரிஸ் வீரர் ம்பாப்பே, செய்த பாஸ் மூலம், பாரிஸ் அணியின் பெர்னாட் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். 

30வது நிமிடத்தின் போது, பாரிஸ் கோல்கீப்பர் பூப்போன் செய்த தவறால், மான்செஸ்டரின் லுக்காக்கு மற்றொரு கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். அவே கோல் விதிப்படி, யுனைட்டட் வெல்ல மேலும் ஒரு கோல் தேவைப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் பாரிஸ் வீரர் கைகளில் பந்து பட்டு யுனைட்டட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் இளம் வீரர் ராஷ்போர்டு கோல் அடித்து 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார். பார்ஸ் அணியை நாக் அவுட் செய்து, காலிறுதிக்கு யுனைட்டட் தகுதி பெற்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP