ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா! அர்ஜென்டினாவுக்கு மற்றொரு வாய்ப்பு...

இந்த உலகக் கோப்பையில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள குரூப் சி-யில், இன்று ஐஸ்லாந்தை, நைஜீரியா வீழ்த்தி மற்றொரு ஷாக் கொடுத்தது.
 | 

ஐஸ்லாந்தை வீழ்த்தியது நைஜீரியா! அர்ஜென்டினாவுக்கு மற்றொரு வாய்ப்பு...

இந்த உலகக் கோப்பையில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள குரூப் சி-யில், இன்று ஐஸ்லாந்தை, நைஜீரியா வீழ்த்தி மற்றொரு ஷாக் கொடுத்தது. 

முதல் போட்டியில் குரேஷியாவிடம் நைஜீரியா தோற்ற நிலையில், அர்ஜென்டினாவுடன் ஐஸ்லாந்து டிரா செய்தது. நேற்று நடைபெற்ற போட்டியில், அர்ஜென்டினா 3-0 என குரேஷியாவிடம் தோற்ற நிலையில், உலகக் கோப்பையில் இருந்து அந்த நட்சத்திர அணி வெளியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று நைஜீரியா, ஐஸ்லாந்துடன் மோதியது. 

முதல் போட்டியில் அர்ஜென்டினாவை அதிர வைத்த ஐஸ்லாந்து, இந்த போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தும் என நிபுணர்கள் எதிர்பார்த்தனர். அதன்படியே, முதல் பாதியில் ஐஸ்லாந்து அணி பல முறை நைஜீரியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. நைஜீரியாவால் முதல் பாதியில் ஒரு கோல் வாய்ப்பு கூட உருவாக்க முடியவில்லை. முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கியது முதல் நைஜீரியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. 48வது நிமிடத்தில், நைஜீரிய வீரர் அஹ்மத் மூஸா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். பின்னர் 75வது நிமிடத்தில் மூஸா மீண்டும் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். 

83வது நிமிடத்தில், ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. முதலில் பவுல் வழங்காத ரெப்ரி, வீடியோ மூலம் சரிபார்த்து வழங்கினார். ஆனால்,  ஐஸ்லாந்து வீரர் கில்ஃபி சிக்கர்ட்சன் அதை மிஸ் செய்தார். இறுதியில் போட்டி 2-0 என முடிந்தது. இந்த போட்டியில் ஐஸ்லாந்து வெற்றி பெற்றிருந்தால், அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கும். ஆனால், தற்போது அந்த அணிக்கு மற்றொரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. கடைசி போட்டியில், அர்ஜென்டினா - நைஜீரியா அணிகளும், குரேஷியா - ஐஸ்லாந்து அணிகளும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் அர்ஜென்டினா நைஜீரியாவை வீழ்த்தி, ஐஸ்லாந்து டிரா செய்தாலோ தோற்றாலோ, மெஸ்ஸி & கோ நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP