நெய்மார் டாப் கியர்; க்ரோவேஷியாவை வீழ்த்தியது பிரேசில்

நேற்று நடைபெற்ற வார்ம்அப் போட்டியில், க்ரோவேஷியாவுடன் மோதிய பிரேசில், நெய்மாரின் அசத்தல் ஆட்டத்தால், 2-0 என சூப்பர் வெற்றி பெற்றது.
 | 

நெய்மார் டாப் கியர்; க்ரோவேஷியாவை வீழ்த்தியது பிரேசில்

நேற்று நடைபெற்ற வார்ம்அப் போட்டியில், க்ரோவேஷியாவுடன் மோதிய பிரேசில், நெய்மாரின் அசத்தல் ஆட்டத்தால், 2-0 என சூப்பர் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பைக்கு முன் நடைபெறும் நட்பு போட்டிகளில் நேற்று க்ரோவேஷியாவுடன், பிரேசில் மோதியது. காயத்தில் இருந்து குணமாகி வந்துள்ள நட்சத்திர வீரர் நெய்மார் பெஞ்சில் இருந்தாலும், குட்டினோ, வில்லியன், ஜீசஸ் என டாப் வீரர்களை கொண்டு பிரேசில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே பிரேசில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பிரேசிலின் வில்லியன், மார்செலோ மிக சிறப்பாக விளையாடி பல வாய்ப்புகளை உருவாக்கினர். க்ரோவேஷியாவின் லுகா மாட்ரிச் மற்றும் ராக்கிடிச்சும் அசத்தலாக விளையாடினர். ஆனால் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

இரண்டவது பாதியில் நெய்மார் களமிறங்கினார். அவர் வந்தது முதல் பிரேசில் மேலும் சிறப்பாக விளையாடியது. 69வது நிமிடத்தின் போது, நெய்மார் இடதுபக்கம் இருந்து 3 வீரர்களை தாண்டிச் சென்று சூப்பர் கோல் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த பிரேசிலின், ஃபிர்மீனோ, 93வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க, போட்டி 2-0 என முடிந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP