மெக்சிகோவை பிரித்து மேய்ந்த நெய்மார்: பிரேசில் சூப்பர் வெற்றி!

பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில், நெய்மாரின் அசத்தல் ஆட்டத்தின் உதவியோடு பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.
 | 

மெக்சிகோவை பிரித்து மேய்ந்த நெய்மார்: பிரேசில் சூப்பர் வெற்றி!

பிரேசில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில், நெய்மாரின் அசத்தல் ஆட்டத்தின் உதவியோடு பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் பிரேசில், மெக்சிகோவுடன் தனது முதல் நாக் அவுட் சுற்றில் மோதியது. தனது குரூப்பில், இருந்த உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி, கால்பந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தது மெக்சிகோ. ஜெர்மனி உலகக் கோப்பையில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக அந்த போட்டி அமைந்தது. 

பிரேசிலுடன் கடந்த காலங்களில் பலமுறை மோதி தோற்றுள்ள மெக்சிகோ, இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் எனும் முனைப்போடு களமிறங்கியது. போட்டி துவங்கியது முதல் சில நிமிடங்களில் மெக்சிகோ மிகவும் சிறப்பாக விளையாடியது. பிரேசில், பின்னணியில் இருந்து மெக்சிகோவை தடுக்க முயற்சி செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிரேசில் போட்டியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. 

முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. இரண்டாவது பாதி துவங்கி சிறிது நேரத்தில், பிரேசிலின் நெய்மார், பந்தை சிறப்பாக எடுத்துச் சென்று வில்லியனிடம் கொடுத்தார். அவர் இரண்டு வீரர்களை தாண்டி சென்று, மீண்டும் நெய்மாரிடம் கொடுக்க, அவர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

பின்னர் மெக்சிகோ போட்டியை சமன் செய்யும் முனைப்பில் கோல் அடிக்க முழு வீச்சில் முயற்சி செய்தது. அதை பயன்படுத்தி, பிரேசில் பலமுறை எதிர்முனையில் கோல் வாய்ப்புகளை உருவாக்கியது,. 88வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஒரு பாஸை தவறாக செய்ய, அதை பிரேசிலின் நெய்மார் எடுத்துச் சென்று ஷாட் அடித்தார். அந்த ஷாட் கோல் கீப்பர் காலில் பட்டு, பிரேசில் வீரர் ஃபிர்மீனோவிடம் சென்றது. அதை அவர் எளிதாக கோல் அடித்து பிரேசிலுக்கு 2-0 என முன்னிலை கொடுத்து வெற்றி பெறச் செய்தார். 

ஒரு கோல் அடித்து, மற்றொரு கோல் அடிக்க உதவிய நெய்மார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP