3 மாதங்களுக்கு நெய்மார் விளையாட முடியாது!

பிரேசில் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் நெய்மார், இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தால், இன்னும் 3 மாதங்களுக்கு விளையாடிய முடியாது என கூறப்படுகிறது.
 | 

3 மாதங்களுக்கு நெய்மார் விளையாட முடியாது!

3 மாதங்களுக்கு நெய்மார் விளையாட முடியாது!

பிரேசில் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மார், இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தால், இன்னும் 3 மாதங்களுக்கு விளையாடிய முடியாது என கூறப்படுகிறது.

பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நெய்மாரை, கடந்த வருடம் சுமார் 222 மில்லியன் யூரோ (1,770 கோடி ரூபாய்) செலவில், பாரிஸ் அணி வாங்கியது. உலகிலேயே மிக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் நெய்மார் ஆவார். பாரிஸ் அணிக்காக அசத்தலாக விளையாடி வந்த நெய்மார், 30 போட்டிகளில் 28 கோல்கள் அடித்துள்ளார். 

முக்கியமான போட்டியான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையில், பாரிஸ் அணி பலம்வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியுடன் மோதி வருகிறது. 2 போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றில், முதல் போட்டியில் பாரிஸ் 1-3 என தோற்றது. இரண்டாவது போட்டியில் மிக சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில், நெய்மாரை நம்பி தான் அணியே இருந்தது. 

ஆனால், இரு தினங்களுக்கு முன், மார்சேய் அணியுடன் விளையாடியபோது, கால் பிசகி காயப்பட்டார் நெய்மார். முதலில் பார்க்க கால் உடைந்தது போல தெரிந்தாலும், பின்னர் கால் பிசகி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கணுக்கால் எலும்பு சிறிய அளவில் உடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் நெய்மாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், அதனால் மே மாதம் வரை அவர் விளையாட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP