மீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 | 

மீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்!

மீண்டும் மும்பை தோல்வி; கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

முதலில் பேட் செய்த மும்பையின் துவக்க வீரர் சூரியகுமார் யாதவ் 72 ரன்கள் விளாசினார். அவருக்கு துணையாக மறுமுனையில் விளையாடிய இஷான் கிஷான், 52 ரன்கள் அடித்தார். இருவரும் சேர்ந்து இந்த ஐபிஎல்-லில் அதிகபட்சமாக 2வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். 14 ஓவர்கள் முடிவில் 129/1 என்ற நிலையில் மும்பை இருந்தது. அதன்பின், அடுத்தடுத்த ஓவர்களில் யாதவ் மற்றும் கிஷான் அவுட்டாக, பின் வந்த வீரர்கள் சொதப்பினர். 

கேப்டன் ரோஹித் ஷர்மா அவசரப்பட்டு ரன் அவுட்டானார். ராஜஸ்தானின் சூப்பர் பந்துவீச்சில், அதிரடி வீரர் பொல்லார்ட் ரன் எடுக்க முடியாமல் தவித்தார். 19வது ஓவரில் ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்களை எடுத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது மும்பை. 

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் உதவாமல் போனாலும், அடுத்து வந்த சேம்சன்(52) - ஸ்டோக்ஸ்(40) ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். அதன்பின், வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க, கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் வீரர் கௌதம், அதிரடியாக விளையாடி, பவுண்டரிகளை குவித்தார். கடைசி 5 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட, சிக்ஸ் மற்றும் போர் அடித்து 19.4 ஓவர்களில் வெற்றியை தேடித் தந்தார். 11 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார் கௌதம். 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. 

இந்த ஐபிஎல்-இல் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை தோற்கும் 4வது போட்டி இதுவாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP