1. Home
  2. விளையாட்டு

பும்ரா கலக்கல்: பஞ்சாபை வீழ்த்தி பிளே ஆப்ஸை நெருங்கியது மும்பை

பும்ரா கலக்கல்: பஞ்சாபை வீழ்த்தி பிளே ஆப்ஸை நெருங்கியது மும்பை


பும்ராவின் அசத்தல் பவுலிங்கால், கிங்ஸ் லெவன் பஞ்சாபை 3 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே ஆப் சுற்றை நெருங்கியது மும்பை இந்தியன்ஸ்.

முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. சூரியகுமார் யாதவ் 27 ரன்களும் க்ருனால் பாண்டியா 32 ரன்களும் அடிக்க, அதிரடி வீரர் பொல்லார்ட், 23 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரி என அரைசதம் விளாசினார். பஞ்சாபின் டியே, வெறும் 16 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.

பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல், மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த ஐபிஎல் சீசனில் தனது 6வது அரைசதத்தை 36 பந்துகளில் ராகுல் அடைந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய பின்ச், 46 ரன்கள் அடித்து ராகுலுக்கு துணையாக இருந்தார். கடைசி 3 ஓவர்களில் 38 ரன் தேவைப்பட, ராகுல் அதிரடியாக விளையாடி 18வது ஓவரில் 15 ரன்கள் விளாசினார். 94 ரன்கள் அடித்திருந்த போது, பும்ரா வீசிய 19வது ஓவரில் ராகுல் அவுட்டானார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அக்சர் பட்டேலால் ஒரு சிக்ஸ் மற்றும் போர் மட்டுமே அடிக்க முடிந்தது. 3 ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.

18 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை எடுத்த பும்ரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரு அணிகளும் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், ரன் ரேட் விகிதம், மும்பை 4வது இடத்திற்கும், பஞ்சாப் 6வது இடத்திற்கு சென்றன. கடைசி போட்டியில், மும்பை டெல்லியுடனும், பஞ்சாப் சென்னையுடனும் மோதுகின்றன. இந்த போட்டிகளில் இரு அணிகளும் வென்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும்.

newstm.in

Trending News

Latest News

You May Like