மான்செஸ்டர் யுனைட்டடுக்கு மேலும் பிரச்னை; செல்சி, லிவர்பூல் சூப்பர் வெற்றி

மான்செஸ்டர் யுனைட்டடுக்கு மேலும் பிரச்னை; செல்சி, லிவர்பூல் சூப்பர் வெற்றி
 | 

மான்செஸ்டர் யுனைட்டடுக்கு மேலும் பிரச்னை; செல்சி, லிவர்பூல் சூப்பர் வெற்றி


நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில், செல்சி, லிவர்பூல் அணிகள் சூப்பர் வெற்றி பெற்றன. மான்செஸ்டர் யுனைட்டட் அணி, சவுத்ஹேம்டன் அணிகள் மோதிய போட்டியில் யுனைட்டட் அணி டிரா ஆனது. 

முன்னதாக லிவர்பூல் அணி லெஸ்டர் சிட்டி அணியுடன் மோதியது. முதலில் லெஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் ஜேமி வார்டி 3வது நிமிடத்திலேயே கோல் அடித்து லிவர்பூலுக்கு அதிர்ச்சி கொடுத்தார். லீவர்பூல் அணியின் முன்னணி வீரர் முஹம்மத் சாலா இரண்டாவது பாதியில் இரண்டு கோல்கள் அடுத்து அந்த அணியை வெற்றிபெற வைத்தார்.

ஸ்டோக் சிட்டியுடன் மோதிய செல்சி, 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் அணியை துவம்சம் செய்தது. ரூடிகர், ட்ரின்க்வாடர், பெட்ரோ, வில்லியன், சாப்பகோஸ்டா ஆகியோர் கோல் அடித்தனர். 

லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணி கடந்த இரண்டு போட்டிகளில் டிரா ஆனதால் 4 புள்ளிகளை இழந்தது. முதலிடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியை விட 15 புள்ளிகள் பின்தங்கி இருந்தது. மோசமாக விளையாடி வரும் அந்த அணி, இந்த போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில், கோல் எதுவும் அடிக்காமல் போட்டி டிரா ஆனது. செல்சி அணி வெற்றி பெற்றதால் தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றது. இதுபோக யுனைட்டட் அணியின் நட்சத்திர வீரர் லுக்காகு காயம் காரணமாக முதல் பாதியிலேயே வெளியேறினார். இது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி பெற்றால், 17 புள்ளிகள் முன்னிலை பெற்று லீக் போட்டியில் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும். தொடர்ந்து 18 போட்டிகள் வென்றுள்ள சிட்டி, இன்றும் வெற்றி பெற்றால் ஐரோப்பிய சரித்திரத்திலேயே தொடர்ந்து அதிக போட்டிகள் வென்ற சாதனையை சமன் செய்யும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP