1. Home
  2. விளையாட்டு

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது மெக்சிகோ!

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது மெக்சிகோ!

உலகக் கோப்பையினை இன்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய மெக்சிகோ, 1-0 என வெற்றி பெற்று கால்பந்து உலகுக்கே ஷாக் கொடுத்தது.

பலம்வாய்ந்த ஜெர்மனி, மெக்சிகோ விளையாடிய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். குரூப் போட்டிகளிலேயே மிகவும் எதிர்ப்பார்க்கடும் போட்டியான இதில், ஜெர்மனி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், மெக்சிகோ மிக சிறப்பாக டிபெண்ட் செய்து விளையாடியதால், தடுப்பு வீரர்களை ஜெர்மனியால் தாண்ட முடியவில்லை. போட்டியின் 35வது நிமிடத்தில், ஜெர்மனியிடம் இருந்து பந்தை பெற்று வேகமாக கவுண்ட்டர் அட்டாக் செய்த மெக்சிகோ வீரர் ஹிர்விங் லோசானோ சூப்பர் கோல் அடித்து உலகக் சாம்பியன்களுக்கு ஷாக் கொடுத்தார்.

அதன் பின் ஜெர்மனி தொடர்ந்து அட்டாக் செய்தது. ஆனால், மெக்சிகோவின் தடுப்பு அரண்களான டிபெண்டர்கள் மொரேனோ மற்றும் அயாலா ஜெர்மனியின் தாக்கத்தை தடுத்தனர். கோல் கீப்பர் ஓச்சோவா ஜெர்மனி வீரர்கள் அடித்த பல ஷாட்களை தடுத்தார். இறுதியில் நட்சத்திர வீரர் மார்கோ ரியுஸ், கோமஸ் போன்ற அதிரடி வீரர்களை இறக்கியும் ஜெர்மனியால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது.

துவக்க போட்டியிலேயே தங்கள் அணி தோல்வியடைந்தது ஜெர்மனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேநேரம், மெக்சிகோ ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். கோல் அடித்தது முதல் போட்டி முடியும் வரை, ரசிகர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மெக்சிகோ ஸ்டைலில் பாடல்களை பாடிஅணி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

மெக்சிகோ, தென் கொரியா, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளை கொண்ட குரூப் Fல், தற்போது மெக்சிகோ முதலிடத்திலும், ஜெர்மனி கடைசி இடத்திலும் உள்ளன. தென் கொரியா ஸ்வீடன் அணிகளுக்கு இடையே நாளை போட்டி நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like