மெஸ்ஸியின் டபுள் ப்ரீகிக்; பார்சிலோனா அசத்தல் வெற்றி!

ஸ்பெயின் லா லிகா கால்பந்து தொடரில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடித்த இரண்டு ப்ரீகிக் கோல்களின் உதவியுடன் பார்சிலோனா அணி, தனது பரம எதிரியான எஸ்பானியோல் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
 | 

ஸ்பெயினின் க்ளப் கால்பந்து தொடரான லா லிகாவில், நடப்பு சாம்பியனான பார்சிலோனா, அதே நகரை சேர்ந்த பரம எதிரியான எஸ்பானியோலுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 

17வது நிமிடத்தின் போது, பார்சிலோனா அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை மெஸ்ஸி, அசத்தலாக கோலுக்குள் தள்ளினார். 26வது நிமிடத்தில், எதிரணி வீரர்கள் 4 பேரை தாண்டி பந்தை கடத்திச் சென்ற மெஸ்ஸி, சக வீரர் டெம்பெலேவுக்கு சூப்பர் பாஸ் கொடுத்தார். அதை கோலுக்குள் தள்ளி, 2-0 என முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதி முடிவில், பார்சிலோனாவின் சுவாரஸ் மற்றொரு அசத்தலான கோல் அடிக்க, 3-0 என பார்சிலோனா முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதியில்,  மெஸ்ஸி, மீண்டும் ஒரு ப்ரீகிக் மூலம் கோல் அடித்து, போட்டி 4-0 என முடிந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா லா லிகாவில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP