"மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம்"

உலகின் சிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, 2018 பலோன் டி'ஓர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது அந்த விருதுக்கு தான் கேவலம் என முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளர் விசென்டே டெல் பாஸ்கே தெரிவித்துள்ளார்.
 | 

"மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம்"

உலகின் சிறந்த கால்பந்து வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, 2018 பலோன் டி'ஓர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது, அந்த விருதுக்கு தான் கேவலம், என முன்னாள் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளர் விசென்டே டெல் பாஸ்க் தெரிவித்துள்ளார்.

கால்பந்து உலகின் மன்னனாக கருதப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார். 2009ம் ஆண்டுக்கு பின், கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பாலோன் டி'ஓர் விருதை பெற்றுள்ளார். 5 முறை பார்சிலோனா அணியின் எதிரி அணியான ரியல் மாட்ரிட்டின் ரொனால்டோ பெற்றுள்ளார். பிரென்ச் கால்பந்து கழகம், சர்வதேச அளவில் உள்ள விளையாட்டு பத்திரிகையாளர்கள், கால்பந்து அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் நடத்தும் கருத்துக்கணிப்பின் படி, ஒவ்வொரு ஆண்டின் சிறந்த வீரர் யார் என தேர்வு செய்து பலோன் டி'ஓர் விருதை வழங்கி வருகிறது.

2008ம் ஆண்டுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரருக்கான 3 பேர் அடங்கிய இறுதி பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாப் 3 வீரர்களில் மெஸ்ஸியின் பெயர் இல்லை. இந்த ஆண்டு இதுவரை அவர் விளையாடியுள்ள 49 போட்டிகளில் 45 கோல்கள் அடித்து, 22 முறை சக வீரர்கள் கோல் அடிக்க மெஸ்ஸி உதவியுள்ளார். சிறந்த வீரராக அதிக போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் மெஸ்ஸி தான். ஆனால், இறுதி பட்டியலில், உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் நாட்டு வீரர்கள் வரானே,  ம்பாப்பே மற்றும் குரேஷிய வீரர் மாட்ரிச் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு சென்ற இரண்டு அணி வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, ஆண்டு முழுக்க சிறப்பாக விளையாடி அதிகபட்ச கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இந்த பட்டியலில் இடம் பெறாததது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுகுறித்து ஸ்பெயின் நாட்டின் பயிற்சியாளராக 2010ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற விசென்டே டெல் பாஸ்க் பேசியபோது, "மெஸ்ஸி இல்லாதது பலோன் டி'ஓர் விருதுக்கு தான் கேவலம். விருதை அவர் வெல்லாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், சிறந்த 3 வீரர்கள் பட்டியலில் கூட இல்லாதது மிகவும் அதிர்ச்சிகரமான சந்தேகத்திற்குரிய விஷயமாக உள்ளது" என வருத்தம் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP