மெஸ்ஸி அசத்தல்; பார்சிலோனா சூப்பர் வெற்றி!

மெஸ்ஸி அசத்தல்; பார்சிலோனா சூப்பர் வெற்றி!
 | 

மெஸ்ஸி அசத்தல்; பார்சிலோனா சூப்பர் வெற்றி!


நேற்று இரவு நடந்த ஸ்பெயின் நாட்டின் கோபா டெல் ரே கால்பந்து கோப்பை போட்டியில் பார்சிலோனா மற்றும் செல்டா விகோ அணிகள் மோதின. இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் முதல் போட்டியில் இரு அணிகளும் 1-1 என டிரா செய்திருந்தன.  சில தினங்களுக்கு முன் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை செல்டா டிரா செய்திருந்தது. எனவே இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

போட்டி துவங்கிய 13வது நிமிடத்தில், ஜோர்டி ஆல்பா கொடுத்த பாசில் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அற்புதமாக அந்த கோலால் அதிர்ச்சியடைந்த செல்டா அணி வீரர்கள் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே, 15வது நிமிடத்தில் அதேபோல ஜோர்டி ஆல்பா கொடுத்த பாசை அதே இடத்தில் இருந்து மெஸ்ஸி மீண்டும் கோலாக்கினர்.

பின்னர் 28வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த 50 அடி தூர சூப்பர் பாசில் ஆல்பா ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை கொடுத்தார். 31வது நிமிடத்தில் செல்டா அணி வீரர் செய்த ஒரு தவறை பயன்படுத்திக்கொண்ட சுவாரஸ் மற்றொரு கோல் அடித்தார். 87வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ராக்கிடிச் மற்றொரு கோல் அடிக்க, 5-0 என வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது பார்சிலோனா.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP