1. Home
  2. விளையாட்டு

ஐரோப்பிய கோல்டன் பூட் விருது பெற்றார் மெஸ்ஸி!

ஐரோப்பிய கோல்டன் பூட் விருது பெற்றார் மெஸ்ஸி!


பார்சிலோனாவுக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸி, இந்த சீசனில் ஐரோப்பிய கண்டத்திலேயே அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, அந்நாட்டு லீக், கப் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை என இதுவரை 54 போட்டிகள் விளையாடி 45 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனாவின் பரம எதிரி அணியான ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூலின் மொஹம்மது சாலா ஆகியோர் 44 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் மோதியதில், இருவரில் யாராவது கோல் அடித்து மெஸ்ஸியை முந்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாலா காயம் காரணமாக முதல் பாதியிலேயே வெளியேறினார். ரொனால்டோ கோல் எதுவும் அடிக்கவில்லை. அதனால், முதலிடத்தில் உள்ள மெஸ்ஸி, 2017-18 கால்பந்து சீஸனில் ஐரோப்பிய கண்டத்தின் கோல்டன் பூட் விருதை பெறுகிறார்.

ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில், மெஸ்ஸியின் மீது அனைவரின் கண்களும் இருக்கும். கடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை இறுதி போட்டி வரை அழைத்து சென்று, உலகக் கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதை பெற்ற மெஸ்ஸி, இந்தமுறை கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். 31 வயதாகும் அவர், க்ளப் அளவில் அனைத்து சாதனைகளையும் படைத்துவிட்டாலும், தேசிய அணிக்காக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. இது அவரது கடைசி உலகக் கோப்பையாக கூட இருக்கலாம்...

newstm.in

Trending News

Latest News

You May Like